Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் போட்டியில் சூப்பர் சாதனை.. தோனி தான் டாப்.. 20வது ஓவரில் ரெக்காட்ஸ் விவரம் இதோ

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக நேற்று தோனி செய்த சாகசத்தை இன்னும் ரசிகர்கள் பிரமித்து பேசி வருகின்றனர்.

கடைசி 4 பந்தில் 16 ரன்கள் விளாசி சிஎஸ்கேக்கு தோனி வெற்றியை பெற்று தந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 20வது ஓவரில் 51 சிக்சர் விளாசி தோனி சாதனை படைத்தார்.

செஸிங்கில் அவர் அடித்த 26 சிக்சர், 26வது பவுண்டரியாகும். இந்த நிலையில், ரன்களை துரத்தும் போது கடைசி ஓவரில் 10 ரன்களுக்கு மேல் தேவைப்படும் என்று நிலை வந்தால்,

IPL 2022- MS Dhoni unique T20 Final over chasing record

அதனை வெற்றிக்கரமாக துரத்துவது மிகவும் கஷ்டம். இந்த நிலையில், செஸிங்கில் 20வது ஓவரில் 15 ரன்கள் மேல் இருக்கும் இலக்கை வெற்றிக்கரமாக துரத்திய வீரர்கள் யார் என்ற சாதனை பட்டியலை ரசிகர்களாகிய உங்களுக்காக தயாரித்தோம். இதில் முதல் இடத்தில் இருப்பது நம் தல தோனி தான்.

15 ரன்களுக்கு மேல் செஸிங்கில் மூன்று முறை வெற்றிக்கரமாக நிகழ்த்தியுள்ளார். அதன் பிறகு டிவில்லியர்ஸ் ஒரு முறையும், ரோகித் சர்மா ஒரு முறையும், பொலார்ட் ஒரு முறையும், அக்சர் பட்டேல் ஒரு முறையும்,. ஜேம்ஸ் பிராங்களின் ஒரு முறையும் குர்கிராத் மான் சிங் ஒரு முறையும். வார்னே ஒரு முறையும் வெற்றிக்கரமாக கடைசி ஓவரில் 15 ரன்களுக்கு மேல் துரத்தியுள்ளனர்.

இதில் தோனி மட்டும் 3 முறை நிகழ்த்தியுள்ளார். டி20 போட்டியில் செஸிங் செய்யும் போது 20 வது ஓவரில் உலகத்திலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தோனி தான் தன் வசம் வைத்துள்ளார்.. 20வது ஓவரில் மட்டும் தோனி 121 பந்துகளை பிடித்து 323 ரன்களை விளாசியுள்ளார். இதில் 26 பவுண்டரிகளும், 26 சிக்சர்களும் அடங்கும், இதில் ஸ்ட்ரைக் ரேட் 266.94. இப்படி ஒரு சாதனையை டிவில்லியர்ஸ், கெயில் கூட படைத்தது இல்லை.

Story first published: Friday, April 22, 2022, 20:18 [IST]
Other articles published on Apr 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+