For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“எதிரிக்கு கூட உங்கள பிடிக்குதே”.. மும்பை போட்டியில் தோனி செய்த விஷயம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோனி செய்த ஒரு விஷயம் ரசிகர்களை மனம் நெகிழவைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் மும்பை அணியிடம் சென்னை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 16 ஓவர்களில் 97 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இதன்பின்னர் ஆடிய மும்பை அணி 14.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 103 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.

தோனியின் நிதானம்

தோனியின் நிதானம்

இந்த போட்டியில் ஒட்டுமொத்த சென்னை அணி வீரர்களும் ஏமாற்றிய போதும், தனி மரமாக அணியை தூக்கி நிறுத்தியது தோனி தான். 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்களை சேர்த்து தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார. இதனால் தான் 36 ரன்களுக்கு சுருண்டிருக்க வேண்டிய சிஎஸ்கே 97 ரன்கள் வரை சென்றது.

சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

இந்நிலையில் போட்டியில் மட்டுமல்லாமல் போட்டி முடிந்த பிறகும் தோனி ஆச்சரியம் தந்துள்ளார். அதாவது போட்டி முடிந்தவுடன் சிஎஸ்கே டக் அவுட் அருகே அதிக கூட்டம் இருந்தது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்த போதுதான் தோனியின் ஆட்டோகிராஃபை வாங்க எதிரணி வீரர்கள் கூட வரிசையில் காத்திருந்தனர்.

தோனியின் பரிசு

தோனியின் பரிசு

மும்பை அணி இளம் வீரர்கள் மற்றும் சிஎஸ்கேவின் ஊழியர்கள் தோனியின் ஆட்டோகிராஃபை கேட்டனர். இதனையடுத்து சிஎஸ்கே ஜெர்ஸியில் ஒன்றன் பின் ஒன்றாக கையெழுத்திட்டு ஒவ்வொரு வீரருக்கும் தோனி பரிசாக கொடுத்தார். அவர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Recommended Video

IPL 2022: 5 வருடத்திற்கு பிறகு முடிவுக்கு வந்த CSK, Mumbai அணிகளின் ஆதிக்கம்.. யார் காரணம்?
தோனியின் அடுத்த ப்ளான்

தோனியின் அடுத்த ப்ளான்

41 வயதை நெருங்கி வரும் தோனி, அடுத்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. இதுகுறித்து பேசியிருந்த அவர், நான் நிச்சயம் அடுத்த சீசனில் சிஎஸ்கே ஜெர்ஸியுடன் இருப்பேன். ஆனால் எப்படி இருப்பேன் என்பது தெரியாது எனக்கூறி சென்றார். இதனால் அவர் அடுத்தாண்டு சிஎஸ்கே ஆலோசகராக செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, May 13, 2022, 18:12 [IST]
Other articles published on May 13, 2022
English summary
MS.Dhoni Nice Gesture in CSK vs MI match ( மும்பை வீரர்களுக்காக தோனி செய்த விஷயம் ) மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோனி செய்த விஷயம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. v
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+