Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அங்கேயா அடிக்கிறது.. கோலி - முகேஷ் சௌத்ரி நடுவே நடந்த வேடிக்கை.. இணையத்தில் பரவும் வீடியோ!

மும்பை: ஆர்சிபி வீரர் விராட் கோலியை தவறான இடத்தில் முகேஷ் சௌத்ரி அடித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

49வது லீக் ஆட்டத்தில் நேற்று சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 173- 8 ரன்களை எடுத்தது. இதன் பின்னர் ஆடிய சிஎஸ்கே அணி 160 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

கோலியின் கம்பேக்

கோலியின் கம்பேக்

இந்த போட்டியில் ஆர்சிபியின் வெற்றியை தாண்டி விராட் கோலியின் ஃபார்ம் ரசிகர்களுக்கு நிம்மதி தந்தது. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த கோலி இந்த போட்டியிலும் அதே நம்பிக்கையுடன் ஆடினார். மொத்தமாக 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 30 ரன்களை சேர்த்தார்.

வேடிக்கையான சம்பவம்

வேடிக்கையான சம்பவம்

இந்நிலையில் இந்த போட்டியில் கோலிக்கு நடந்த ஒரு சம்பவம் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. ஆட்டத்தின் முதல் ஓவரை முகேஷ் சௌத்ரி வீசினார். கடைசி பந்தை அவர் இன்ஸ்விங்காக வீச, கோலி அதனை அடித்துவிட்டு, ரன் ஓட முயன்றார். ஆனால் பந்து நேராக பவுலரிடமே சென்றது.

சிரிப்பலை

களத்தில் சிரிப்பலை

இதனையடுத்து கோலியை அவுட்டாக்க முகேஷ் சௌத்ரி பந்தை வீச, கோலி திரும்பி கிறீஸை நோக்கி ஓடினார். அப்போது பந்து எதிர்பாராத விதமாக ஸ்டம்பிற்கு பதிலாக கோலியின் பின் புறத்தில் வேகமாக பட்டது. இதனால் சக வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனினும் கோலிக்கு எதுவும் ஆகாததால் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இதுகுறித்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

Recommended Video

IPL 2022: Sanga's Cricket Wrap | Dhoniயை திட்டிய Virat Kohli? | Arjun Tendulkar's Debut?|
பிசிசிஐ-ன் முடிவு

பிசிசிஐ-ன் முடிவு

விராட் கோலியின் ஃபார்ம் சரியில்லை எனக் கூறி அவருக்கு சிறிது காலம் ஓய்வெடுக்க பிசிசிஐ முடிவெடுத்திருந்தது. தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடரில் கூட அவரின் பெயர் இடம்பெறாது என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கோலி தற்போது கொடுத்து வரும் கம்பேக் பிசிசிஐ முடிவை மாற்றி அமைக்கும் என தெரிகிறது.

Story first published: Friday, May 6, 2022, 0:29 [IST]
Other articles published on May 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+