Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்டின் ஒரு தவறான முடிவு.. மொத்தமாக மாறிய ஆட்டம்..பிளே ஆப்க்கு சென்றது ஆர்சிபி..

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய டெல்லி அணி தொடரை விட்டு வெளியேறியது. இதனால் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு சென்றது.

ரிஷப் பண்ட் கேப்டனாக டிம் டேவிட்க்கு டிஆர்எஸ் முடிவு கேட்காமல் விட்டது ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியில் பிரித்வி ஷா பிளேயிங் லெவனில் திரும்பினார்.

டெல்லி அணி சரிவு

டெல்லி அணி சரிவு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 5 ரன்னில் பும்ராவிடம் பிடிப்பட்டார். அதன் பிறகு டெல்லி அணிக்கு சரிவு தொடங்கியது. கடந்த சில போட்டியில் டெல்லி அணியின் பேட்டிங் முதுகு எலும்பாக இருந்த மிட்செல் மார்ஷ் பும்ரா பந்துவீச்சில் கோல்டன் டக் ஆனார். மார்ஷ் அடித்த பந்தை பாய்ந்து ரோகித் சர்மா பிடித்தார். இது திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதிரடியாக விளையாட முற்பட்ட பிரித்வி ஷா 24 ரன்களில் பும்ரா பந்தில் பெவிலியன் திரும்பினார்.

160 ரன்கள் இலக்கு

160 ரன்கள் இலக்கு

இதே போன்று சர்ஃபிராஸ் கான் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் லாவகமாக தாவி பிடிக்க, டெல்லி அணி சரிவை கண்டது. 50 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தடுமாறியது. 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ரிஷப் பண்ட், ஆட்டமிழக்க இறுதியில் ரோமன் பொவேல் தனி ஆளாக நின்று 43 ரன்கள் சேர்த்தார். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.

தடுமாறிய ரோகித்

தடுமாறிய ரோகித்

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் ரோகித் சர்மா கடுமையாக தடுமாறினார். 13 பந்துகளில் அவர் 2 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். பவர்பிளேவில் மும்பை அணி 27 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. இதனையடுத்து இஷான் கிஷனும், பிரவீசும் அபாரமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். பிரவீஸ் 37 ரன்களும், இஷான் கிஷன் 48 ரன்கள் அடித்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

டிம் டேவிட்டுக்கு லக்

டிம் டேவிட்டுக்கு லக்

இதனால் மீண்டும் மும்பை அணியில் தடுமாற்றம் ஏற்பட்டது. அப்போது களத்துக்கு வந்த டிம் டேவிட், 4 சிக்சர்களை பறக்கவிட்டார். 11 பந்துகளில் 34 ரன்கள் அடிக்க ஆட்டமே மும்பை பக்கம் திரும்பியது. இந்த நிலையில் டிம் டேவிட்க்கு நடுவர் அவுட் தர மறுத்தார். அனால் டிஆர்எஸ் முடிவை எடுக்காமல் ரிஷப் பண்ட் விட்டது, டெல்லி அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட, கலீல் அகமது (பவுண்சர்)நோ பால் வீச, ஃப்ரி ஹிட் கிடைத்தது. அதனை பயன்படுத்தி கொண்டு மும்பை அணி 5 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. எனினும் மும்பை அணி நடப்பு சீசனில் புள்ளி பட்டியலில் 10வது அணியாக தொடரை முடித்துள்ளது.

Story first published: Saturday, May 21, 2022, 23:56 [IST]
Other articles published on May 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+