
ரோகித் அபார கேட்ச்
இதனையடுத்து, லக்னோ அணியின் தொடக்க வீரராக கேஎல் ராகுலும், குயின்டன் டி காக்கும் களமிறங்கினர். முதல் 2 ஓவரில் மும்பை அணி கட்டுக்கோப்பாக பந்துவீச வெறும் 6 ரன்கள் தான் சென்றது. இதன் பின்னர் பும்ரா ஓவரின் 5வது பந்தில் குயின்டன் டி காக் கொடுத்த எளிய கேட் சை தவறவிட்டதும் மட்டுமல்லாமல் பந்தை சிக்சருக்கு திலக் வர்மா விட்டார். எனினும் அடுத்த பந்திலே ரோகித் சர்மா அபாரமாக கேட்ச் பிடிக்க டி கார் அவுட் ஆனார்.

கேஎல் ராகுல் சதம்
இதனையடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே நிதானமாக விளையாடி 22 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.மார்கஸ் ஸ்டோனிஸ் டக் அவுட் , குர்னல் பாண்டியா 1 ரன், தீபக் ஹூடா 10 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க லக்னோ அணி 121 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து தடுமாறியது. ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ராகுல், நடப்பு சீசனில் மும்பைக்கு எதிராக 2வது சதம் விளாசினார். இதன் மூலம் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது. குயின்டன் டி காக் 20 பந்தில் 8 ரன்கள் மட்டுமே அடித்து வினோத முறையில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரவீஸ் 3 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா, 39 ரன்கள் விளாசி முக்கிய கட்டத்தில் வெளியேறினார்.

மும்பை 8வது தோல்வி
இதனால் மும்பை அணி தடுமாறியது. எனினும் தனி ஆளாக போராடி கிலக் வர்மா, 2 பவுண்டரி, 2 சிக்சர் விளாசி 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து முக்கிய ஆட்டத்தில் பெவிலியன் திரும்பினார். இதனால் கடைசி 2 ஓவரில் 44 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் சமிரா அபாரமாக பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். இதனையடுத்து கடைசி ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. இதில் பொலார்ட் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அவர் மீது குர்னல் பாண்டியா எகிறி குதித்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட் விழ, லக்னோ 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.


Click it and Unblock the Notifications











