கோலியின் கனவுக்கு ரோகித் ஆப்பு.. முக்கிய வீரர்கள் அணியிலிருந்து விலகல்.. ஆர்சிபிக்கு கஷ்டம்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு செல்ல வேண்டும் என்றால், மும்பை அணி டெல்லியை வீழ்த்த வேண்டும்.

இதனால் ஆர்சிபி அணி வீரர்கள் மும்பை அணிக்கு அதரவு அளிக்க உள்ளதாகவும், மைதானத்திற்கு நேரில் சென்று போட்டியை பார்க்க உள்ளதாகவும் கோலி தெரிவித்தார்.

அடுத்த சீசனில் சிஎஸ்கே குறிவைக்க போகும் வீரர்கள்.. மாஸான 4 பேர்.. கிடைத்தால் செம லக்அடுத்த சீசனில் சிஎஸ்கே குறிவைக்க போகும் வீரர்கள்.. மாஸான 4 பேர்.. கிடைத்தால் செம லக்

இதனால் நாளை மும்பை, டெல்லி அணிகள் மோதும் ஆட்டம், கிட்டதட்ட ஒரு நாக் அவுட் போட்டி போல் ரிஷப் பண்ட்க்கு அமைந்துள்ளது.

மும்பை Vs டெல்லி

மும்பை Vs டெல்லி

ஆனால் ஐபிஎல் வரலாறோ மும்பை அணிக்கு எதிராக உள்ளது. மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 2 முறை மும்பை அணி சந்தித்துள்ளது. இதில் 2 முறையும் மும்பை அணி தோற்றுள்ளது. ரோகித் சர்மா அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை டுபிளஸிஸ் கூறியிருந்தார். தற்போது நிலைமை அப்படி தான் உள்ளது.

பேட்டிங்கில் மாற்றம்

பேட்டிங்கில் மாற்றம்

மும்பை அணி, கடந்த சில போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுகிறது. அதற்கு காரணமாக இருந்தவர் டிம் டேவிட். இந்த நிலையில், அவருக்கு ஓய்வு வழங்கிவிட்டு பொலார்ட் அல்லது பிரவீஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கலாம் என கூறப்படுகிறது. அப்படி டிம் டேவிட் விளையாடினாலும், மற்றொரு நட்சத்திர வீரருக்கு அணியில் இடம் இருக்காது.

புதியவர்களுக்கு வாய்ப்பு

புதியவர்களுக்கு வாய்ப்பு

இதே போன்று மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, உனாட்கட் போன்ற வீரருக்கு வாய்ப்பு வழங்கலாம் என தெரிகிறது. இது குறித்து முன்பே பேசிய ரோகித் சர்மா, கடைசி போட்டியில் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறி இருந்தார். அந்த வகையில் அர்ஜூன் டெண்டுல்கருக்கு கடைசி போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலமான டெல்லி

பலமான டெல்லி

கடந்த 2 ஆண்டுகளாக மும்பை அணியில் உள்ள அர்ஜூன் டெண்டுல்கருக்கு இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு தரவில்லை. அதே சமயம், வெற்றி பற்றே ஆக வேண்டும் என்பதால் வார்னர், ரிஷப் பண்ட், போவெல் போன்ற பலமான அணியை டெல்லி களமிறக்க உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2022- Mumbai might give chance to young players vs Delhi கோலியின் கனவுக்கு ரோகித் ஆப்பு.. முக்கிய அணியிலிருந்து விலகல்.. ஆர்சிபிக்கு கஷ்டம்
Story first published: Friday, May 20, 2022, 15:18 [IST]
Other articles published on May 20, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X