“இவ்வளவு சீக்கிரமாவா...?” ஐதராபாத் அணியின் ப்ளேயிங் 11-ஐ உடைத்த முரளிதரன்.. படு மாஸ் தான் போங்க!
பெங்களூரு: ஐதராபாத் அணியின் ஓப்பனிங் மற்றும் ப்ளேயிங் 11 குறித்து பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் தற்போதே அறிவித்துள்ளார்.
ஐபிஎல் 2022ம் ஆண்டிற்கான மெகா ஏலத்தில் ஐதரபாத் அணி தொடக்கத்தில் சற்று பொறுமை காத்த நிலையில் நேரம் ஆக ஆக வீரர்களை அள்ளியது.
அந்த அணி இந்த முறை மொத்தமாக ரூ.89.90 கோடி செலவு செய்து 23 வீரர்களை கொண்ட அணியை உருவாக்கியுள்ளது.

முரளிதரன் விளக்கம்
ஒவ்வொரு அணியும் 20க்கும் மேற்பட்ட வீரர்களை எடுத்தாலும், அதில் இருந்து ப்ளேயிங் 11-க்கு யாரெல்லாம் தேர்வாகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும். இந்நிலையில் அதனை தற்போதே வெளியிட்டுள்ளார் ஐதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளர் முத்தையா முரளிதரன்.

ஓப்பனிங் ஜோடி
அதன்படி கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தான் ஓப்பனிங்கிற்கு களமிறங்குவார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிஷேக் முதல் முறையாக கடந்த 2018ம் ஆண்டு டெல்லி அணிக்காக அறிமுகமானார். அந்த சீசனில் 19 பந்துகளில் 46 ரன்கள் விளாசி வியப்பை ஏற்படுத்தினார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு சரிவர வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

முழு சுதந்திரம்
2019ம் ஆண்டு ஐதராபாத் அணிக்கு வந்த போது மிடில் ஆர்டரில் மட்டுமே வாய்ப்புக்கிடைத்து வந்தது. ஆனால் இனி அவர் ஓப்பனிங்கில் களமிறக்கி பார்க்கவிருப்பதாகவும், அவர் இடதுகை ஆல்ரவுண்டர் மற்றும் பவர் ஹிட்டராக இருப்பதால் அவருக்கு முழு சுந்திரம் கொடுத்து டாப் ஆர்டரில் களமிறங்குகிறோம்.

பேட்டிங் ஆர்டர்
அவர்களுக்கு அடுத்தபடியாக ஏய்டன் மர்க்ரம், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரண், அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர் என அடுத்தடுத்து களமிறங்கவுள்ளனர் என முரளிதரன் கூறியுள்ளார். இந்த பேட்டிங் ஆர்டர் மிகவும் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களாக அமைந்துள்ளனர். இதனால் இந்தாண்டு ஐதராபாத் அணிக்கு பேட்டிங் பஞ்சமே இருக்காது.


Click it and Unblock the Notifications