Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீயும், நானும் வேற இல்லடா.. சிஎஸ்கே, மும்பையை கலாய்க்கும் மீம்ஸ்.. சிரிப்பு மழை உறுதி

மும்பை: ஐபிஎல் தொடரையே ஒரு காலத்தில் கட்டி ஆண்ட சிஎஸ்கே, மும்பை அணிக்கு இம்முறை பரிதாபமான தொடக்கமே அமைந்துள்ளது.

Recommended Video

IPL 2022: Netizens Trolls Mumbai Indians And Chennai Super Kings For Hattrick Loss | Oneindia Tamil

இதுவரை இரு அணிகளும் ஹாட்ரிக் தோல்வி அடைந்து முறையே 8வது மற்றும் 9வது இடத்தில் உள்ளது. அது எப்படி ரெண்டு பேரும் சொல்வி வைத்தது மாதிரி தோல்வி அடைகிறீர்கள் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதனால் இரு அணிகளையும் வைத்து சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்படும் மீம்ஸ் உங்கள் பார்வைக்கு.

WWE மீம்ஸ்

WWE மீம்ஸ்

WWE வில் வருவது போல் இரண்டு பேரை ஒரு ஊரே சேர்ந்து அடிக்கும் அல்லவா. அதே போல் மும்பை, சென்னை அணியை சுற்றி போட்டு மற்ற அணிகள் கும்மி கீழே தள்ளிவிட்டு ரவுண்ட் அடிப்பது போல் ஒரு மீம் சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. பார்ப்போம், இரண்டு அணிகளும் அப்படியே படுத்திருக்குமா இல்லை அண்டர்டேக்கர் போல் எழுந்திருக்குமா என்று..?

இரண்டுமே வீக்

இரண்டுமே வீக்

எப்போதும் ஐபிஎல் தொடரில் மும்பை அணி, சென்னை அணி இரண்டுமே பலமான அணியாக தான் இருக்கும். எப்போதாவது சீசன் தொடக்கத்தில் சிஎஸ்கே ஸ்ட்ராங்காக இருந்தால் மும்பை வீக்காக இரக்கும். மும்பை ஸ்ட்ராங்காக இருந்தால், சிஎஸ்கே வீக்காக இருக்கும். முதல் முறையாக இரண்டு அணியுமே வீக்காக இருப்பது போல் சீம்ஸ் செல்ல நாய்க்குட்டியை வைத்து மீம்ஸ் போட்டு இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இது என்னடா சோதனை

இது என்னடா சோதனை

இதே போல், ரஜினி முருகன் படத்தில் வாழைபழத்தை எடுக்க முடியமாமல் ஒருவர் கஷ்டப்படுவாரே, அந்த காட்சியை வைத்து 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் , ஒரு வெற்றியை பெற கஷ்டப்படுவது போல் மீம் போட்டு ரசிகர்கள் கிண்டல் செய்கின்றனர்.

இரட்டையர்கள் மீம்ஸ்

இரட்டையர்கள் மீம்ஸ்

மும்பை, சிஎஸ்கேவும் இம்முறை ஒரே மாதிரி விளையாடி தோற்பதை கிண்டலடிக்கும் வகையில் மாற்றான் படத்தில் சூர்யா இரட்டையர் போல் ஒன்றாக இருப்பார்களே, அது தான் சிஎஸ்கேவும், மும்பை இந்தியன்ஸ் அணியுமாம். இதே போல் சிஎஸ்கே எங்கே சென்றாலும், மும்பையும் அங்கு வந்து நிற்கிறது என்று எஸ்.எம்.எஸ். டெம்ப்ளேட் வைத்து கலாய்த்து இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

அடுத்த கேப்டன்

அடுத்த கேப்டன்

நேற்றைய ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ், ஒரு மொக்கை பந்துவீச்சாளரை அடித்து தனது அதிரடி திறமையை வெளிப்படுத்தி இருப்பதாக வடிவேலு மீம்ஸ் வைத்து விமர்சித்து இருக்கிறார்கள். இறுதியாக, பும்ரா கேப்டன் பதவிக்காக ரோகித் சர்மாவை பார்த்து புதுப்பேட்டை படத்தில் தனுஷ் கேட்பது போல் மீம்ஸ் போட்டு ரனகளப்படுத்தியுள்ளனர்.

Story first published: Thursday, April 7, 2022, 18:21 [IST]
Other articles published on Apr 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+