ஐபிஎல் 2022: டேவிட் வார்னரின் அடுத்த ப்ளான்.. பெரும் தொகைக்கு வளைத்த முன்னணி அணி.. ரசிகர்கள் குஷி!
மும்பை: ஐபிஎல் தொடரின் முன்னணி வீரரான டேவிட் வார்னரை புதிதாக வந்துள்ள அணி பெரும் தொகைக்கு வளைத்துப்போட்டுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கென்று இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அவருக்கு மோசமாக அமைந்தது. ஐபிஎல் தொடரின் பாதியிலேயே கேப்டன்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர், தீடீரென அணியில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டார்.

காரணம் என்ன
ப்ளேயிங் 11ல் வீரர்களை தேர்வு செய்வதில் நிர்வாகத்திற்கும் டேவிட் வார்னருக்கும் இடையே பெரும் பிரச்சினை ஏற்பட்டது. வெளிப்படையாக மைதானத்திலேயே அவர் கூறிவிட்டதால் பிரச்சினை இன்னும் சூடுபிடித்தது. இதனால் 2016ல் கோப்பை வென்றுக் கொடுத்த கேப்டன் என்றும் பாராமல் அந்த அணி வார்னரை ஒதுக்கியது. அவர் களத்திற்கு வெளியில் சோகமாக உட்கார்ந்திருந்த காட்சிகள் இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாது.

வார்னரின் அடுத்த ப்ளான்
இதனையடுத்து அந்த அணிக்கு பதிலடி கொடுப்பதற்காக அவர் சரியான வாய்ப்புக்காக காத்துள்ளார். குறிப்பாக மெகா ஏலத்தின் போது அவர் எந்த அணிக்கு செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் அதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது அகமதாபாத் அணியால் டேவிட் வார்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அகமதாபாத் அணியின் தேர்வு
புதிதாக வந்துள்ள அணிகள் மெகா ஏலத்திற்கு முன்பாகவே 2 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த அணி டெல்லி கேப்பிடல்ஸின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்துள்ளது. மேலும் மும்பை அணியின் வீரர் ஹர்திக் பாண்ட்யாவையும் வாங்கியுள்ளது.
Recommended Video

எவ்வளவு தொகை
ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதால் டேவிட் வார்னர் துணைக்கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டேவிட் வார்னர் சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடர், அஷஸ் டெஸ்ட் தொடர் என சிறப்பாக செயல்பட்டுள்ளதால் பெரும் தொகைக்கு ( சுமார் ரூ.12 கோடி) அவரை அகமதாபாத் அணி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications