Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்டத்தில் இருந்து தப்பிய கொல்கத்தா.. ராஜஸ்தானுக்கு எதிராக அபார வெற்றி.. மற்ற அணிகளுக்கு ஆப்பு!

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி இரு வீரர்களின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது.

47வது லீக் ஆட்டமாக நடைபெற்ற இந்த மோதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடர்ந்து 5 தோல்விகளை பெற்றிருந்த கொல்கத்தா அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயம் இருந்தது. அதற்கேற்றார் போல சிறப்பாக பவுலிங்கும் அமைந்தது.

ராஜஸ்தான் சொதப்பல்

ராஜஸ்தான் சொதப்பல்

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் தேவ்தத் பட்டில் உமேஷ் யாதவ் வேகத்தில் சிக்கி 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். வழக்கமாக அதிரடி காட்டும் ஜாஸ் பட்லரும் 22 ரன்களுக்கு அவுட்டானார். இதனால் ராஜஸ்தான் அணி ஆட்டம் கண்டது. அப்போது வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் 49 பந்துகளில் 54 ரன்களும், ஹெட்மெயர் 13 பந்துகளில் 27 ரன்களும் அடிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்களை குவித்தது.

தொடக்கமே ஷாக்

தொடக்கமே ஷாக்

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியிலும் தொடக்கம் ஏமாற்றம் தான். அந்த அணியின் ஓப்பனிங் வீரர் ஆரோன் ஃபிஞ்ச் 4 ரன்களுக்கும், பாபா இந்திரஜித் 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 32 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தத்தளித்த அணியை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களை அடித்து காப்பாற்றி சென்றார். இதனால் 92 - 3 என்ற நிலை உருவானது.

சிறப்பான பார்ட்னர்ஷிப்

சிறப்பான பார்ட்னர்ஷிப்

இதன் பின்னர் வந்த நிதிஷ் ராணா - ரிங்கு சிங் ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒருபுறம் ரிங்கு அதிரடி காட்ட, ராணா நிதானம் காட்டினார். இதனால் 19. ஓவர்களில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய நிதிஷ் ராணா

ப்ளே ஆஃப் ரேஸ்

ப்ளே ஆஃப் ரேஸ்

நடப்பு தொடரில் கொல்கத்தா அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும். இந்த போட்டியில் மட்டும் தோல்வியடைந்திருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு கடினமாகியிருக்கும். ஆனால் தப்பித்துள்ளது. இனி வரும் 4 போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றுவிட்டால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இது ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 2, 2022, 23:34 [IST]
Other articles published on May 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+