For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நோ பாலா? இல்லையா?” ஐபிஎல்-ல் டிக்ளர் செய்ய முயன்ற ரிஷப் பண்ட்.. ஆஃப் சைட் கேமிராவில் பதிவான ஆதாரம்

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் திடீரென டிக்ளர் செய்ய முயன்றது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Recommended Video

IPL 2022 : Rishabh Pant loses cool as DC vs RR match ends with no-ball controversy | Oneindia Tamil

நேற்று நடைபெற்ற 34வது லீக் போட்டியில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி அசுர பேட்டிங்கை காட்டியது

பட்லரின் சதம்

பட்லரின் சதம்

தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 65 பந்துகளில் 116 ரன்களை விளாசினார். மற்றொரு ஓப்பனர் தேவ்தத் பட்டிக்கல் 35 பந்துகளில் 54 ரன்களை அடித்தார். இதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 46 ரன்களை குவிக்க, 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை குவித்தது.

டெல்லி அணி பேட்டிங்

டெல்லி அணி பேட்டிங்

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா (37), டேவிட் வார்னர் (28), ரிஷப் பண்ட் (44), லலித் யாதவ் (37) என அடிக்க சீரான வேகத்தில் ரன்கள் உயர்ந்தது. மற்ற வீரர்கள் சொதப்ப, 8வது வீரராக களமிறங்கிய ரோவ்மென் போவல் சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதனால் கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது.

3 சிக்ஸர்கள்

3 சிக்ஸர்கள்

ஓபெட் மெக்காய் வீசிய கடைசி ஓவரில் முதல் மூன்று பந்துகளை சிக்ஸர்களுக்கு கிடாசி ரோவ்மென் போவல் வியப்பூட்டினார். எனினும் அதில் 3வது பந்து தான் சர்ச்சையை கிளப்பியது. ஃபுல் டாஸாக உடலுக்கு வந்த பந்தை போவெல் சிக்ஸருக்கு அடித்துவிட்டார். எனினும் அது நோ பால் என அம்பயரிடம் கேட்டார். ஆனால் அது சரியான பந்துதான் என நடுவரும் பிடிவாதமாக இருந்தார்.

பண்ட்-ன் அதிரடி

பண்ட்-ன் அதிரடி

டெல்லி அணியின் டக் அவுட்டில் இருந்த பயிற்சியாளர்கள், வீரர்கள் என அனைவரும் நடுவரின் முடிவுக்கு எதிராக வாக்குவாதம் செய்தனர். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பண்ட், கள வீரர்களிடம் "நீங்கள் விளையாட வேண்டாம், வந்துவிடுங்கள், ஏமாற்றுகிறார்கள்" என அழைத்துவிட்டார். பேட்ஸ்மேன்களும் புறப்பட்டுவிட்டனர். இதனால் மைதானத்தில் கடும் பரபரப்பு நிலவியது.

நடுவர் பிடிவாதம்

நடுவர் பிடிவாதம்

எனினும் அதன் பின்னர் சமாதானப்படுத்தினர். இறுதியில் 20 ஓவர்களில் டெல்லி அணி 207 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த ஒரு பந்திற்கு மட்டும் நோ பால் கொடுத்திருந்தால், ஆட்டத்தின் முடிவே வேறு மாதிரி மாறியிருக்கும். ஆனால் கள நடுவரின் பிடிவாத முடிவால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில் அதற்கான ஆதாரங்கள் வெளியாகி குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

 உண்மையில் நோ பால் தானா?

உண்மையில் நோ பால் தானா?

அதாவது லெக்சைட் கேமிராவில் பதிவான கேட்ச்களின் படி, பந்து இடுப்பு பகுதிக்கு மேல் சென்றுள்ளது. நேர் திசையில் பதிவான காட்சிகளிலும் பந்து இடுப்பிற்கு மேல் தான் சென்றுள்ளது. இதனையடுத்து பந்து சென்ற பகுதியை கோடிட்டு நோ பால் தான் எனக் கூறுகின்றனர்.

ஆஃப் சைட் காட்சிகள்

ஆஃப் சைட் காட்சிகள்

ஆனால் ஆஃப் சைட் திசையில் பதிவான காட்சிகளில் பந்து போவலின் இடுப்பிற்கு கீழ் தான் சென்றுள்ளதாக உள்ளது. போவெல் தான் சற்று குனிந்து ஆடியுள்ளார். எனவே இது சரியான பந்து தான், நடுவர்கள் மீது தவறில்லை எனக் கூறி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும், 3வது நடுவர் இதில் தலையிட்டு, சரியான முடிவை எடுத்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் ஆதங்கம்.

Story first published: Saturday, April 23, 2022, 15:14 [IST]
Other articles published on Apr 23, 2022
English summary
NO ball in DC vs RR Match ( டெல்லி vs ராஜஸ்தான் போட்டியில் நோ பால் சர்ச்சை ) டெல்லி - ராஜஸ்தான் போட்டியில் வீசப்பட்டது நோ பாலா? இல்லையா? என பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+