Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரு துருவங்கள்.. சிஎஸ்கே போட்டியில் ஒரு சாதனை.. ஒரு வேதனை..? தோனிக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!!

மும்பை: சென்னை அணியின் போட்டியில் ஒரு சாதனை மற்றும் ஒரு வேதனை என்பது போன்ற சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

Recommended Video

IPL 2022 Chennai Super Kings-ஐ திணற வைத்த Gujarat Titans | Oneindia Tamil

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் பேட்டிங்கில் சொதப்பல் தான் மிஞ்சியது.

சிஎஸ்கே பேட்டிங் சொதப்பல்

சிஎஸ்கே பேட்டிங் சொதப்பல்

தொடக்க வீரர் டெவோன் கான்வே 5 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி தந்தார். அதன்பின்னர் வந்த மொயீன் அலி (21), ஷிவம் தூபே (0), தோனி (7) என ரன்கள் அடிக்கவே திணறினர். ருதுராஜ் கெயிக்வாட் 49 பந்துகளில் 53 ரன்களும், ஜகதீசன் 33 பந்துகளில் 39 ரன்களும் குவித்தனர். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 133- 5 ரன்களை மட்டுமே சேர்த்தது.

ஐபிஎல் சாதனை

ஐபிஎல் சாதனை

இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல் எட்டப்பட்டது. அதாவது ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட ஆண்டாக 2022ம் ஆண்டு அமைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மொத்தமாக 872 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்தாண்டு முடிவதற்குள் 873 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுவிட்டன. இதனால் ஐபிஎல் தொடரின் தரம் மேலும் உயர்ந்துள்ளது.

பவுண்டரி ரெக்கார்

பவுண்டரி ரெக்கார்

இது ஒருபுறம் இருக்க, இந்த போட்டியில் சிஎஸ்கே மோசமான ரெக்கார்டை வைத்தது. குஜராத்தின் பவுலிங்கை சமாளிக்க முடியாத சிஎஸ்கே தனது இன்னிங்ஸின் கடைசி 30 பந்துகளில் ஒரு பவுண்டரியை கூட அடிக்கவில்லை. ஒவ்வொரு ஓவரிலும் சிங்கிள்கள் மட்டுமே வந்தன. கடைசி 5 ஓவரில் சென்னை அணிக்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் வேதனையடைந்தனர். தோனியும் 10 பந்துகளை சந்தித்தும் 7 ரன்களை மட்டுமே எடுத்து சோகமாக வெளியேறினார்.

சிஎஸ்கே பரிதாபம்

சிஎஸ்கே பரிதாபம்

சென்னை அணி இந்த தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள்ளது. இன்றைய போட்டியிலும் தோல்வியடைந்தால், இந்தாண்டு மீண்டும் கடைசி இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, May 15, 2022, 18:31 [IST]
Other articles published on May 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+