Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெயீரன் பொல்லார்ட் நீக்கம்.. சிஎஸ்கேவுக்கு எதிராக ரோகித் 2 அதிரடி முடிவு.. பலமான மும்பை ப்ளேயிங் 11

மும்பை: நேற்று வந்த வீரர் ஒருவருக்காக மும்பை அணியில் இருந்து கெயீரன் பொல்லார்ட்டை அதிரடியாக நீக்கியுள்ளார் ரோகித் சர்மா.

Recommended Video

MI vs CSK MS Dhoni வியூகத்தை கணித்த Rohit என்ன நடந்தது? | OneindiaTamil

ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியாக இன்று சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

மும்பையின் முனைப்பு

மும்பையின் முனைப்பு

இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சென்னை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 17 ரன்களை விளாசி தோனி ஃபினிஷராக அந்த போட்டியில் ஜொலித்தார் எனவே இன்று அதற்கு பதிலடி கொடுக்க மும்பை அணி முனைப்புடன் உள்ளது.

கெயீரன் பொல்லார்ட்

கெயீரன் பொல்லார்ட்

இந்நிலையில் இதற்காக 2 முக்கிய மாற்றங்களை செய்துள்ளனர். அதாவது மும்பை அணியின் முக்கிய வீரரான கெயீரன் பொல்லார்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக புதிதாக வந்துள்ள தென்னாப்பிரிக்க வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பொல்லார்ட் தொடர்ந்து சொதப்பி வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு முக்கிய மாற்றம்

மற்றொரு முக்கிய மாற்றம்

இதே போல அணியின் சுழற்பந்துவீச்சில் ஒரே ஒரு நம்பிக்கையாக இருந்து வந்த முருகன் அஸ்வினும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக ஹிர்திக் ஷோக்கீன் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய ரோகித் சர்மா இந்த சீசன் எங்களுக்கு முடிந்தது. எனவே எதிர்காலத்தை மனதில் வைத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் என்பது போன்று பேசினார்.

சென்னை அணி

சென்னை அணி

சென்னை அணியை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ரவீந்திர ஜடேஜா விட்டுச்சென்ற சுழற்பந்துவீச்சு துறையை மஹீஷ் தீக்‌ஷணா மற்றும் மொயீன் அலி கவனிக்கவுள்ளனர். ஆனால் போட்டி நடைபெறும் மும்பை வான்கடே களம் ஸ்பின்னர்களுக்கு உதவாது என்பது போன்று உள்ளது.

Story first published: Thursday, May 12, 2022, 19:33 [IST]
Other articles published on May 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+