Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி தலைமேல் தொங்கும் கத்தி.. இன்னிக்காவது அடிப்பாரா கிங்.. ஷமி உருவத்தில் காத்திருக்கும் ஆபத்து

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் இன்னொரு விசயம், விராட் கோலியின் சொதப்பல் பேட்டிங் தான்.

Recommended Video

IPL 2022: Sanga's Cricket Wrap | Ganguly Supported Virat Kohli | Dhoni vs DJ Bravo |Powell Finishing

கடந்த ஆண்டை விட, இம்முறை ஐபிஎல் தொடருக்கான டிஆர்பி ரேட்டிங் குறைந்துள்ளது. இதற்கு காரணம் சிஎஸ்கே, மும்பையின் தொடர் தோல்விகள்

விராட் கோலி, ரோகித்தின் சொதப்பல் பேட்டிங் தான். ஆர்சிபி தற்போது 9 போட்டியில் விளையாடி 5இல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

பேட்டிங் பூகம்பம்

பேட்டிங் பூகம்பம்

தற்போது கடைசியாக விளையாடி 2 போட்டியிலும் பெங்களூரு அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஐதராபாத்க்கு எதிராக 68 ரன்களும், ராஜஸ்தானுக்கு எதிராக 115 ரன்களும் எடுத்தன. இதற்கு காரணம் ஆர்சிபியின் பலமாக கருதப்படும் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் டுபிளஸிஸ் ஆகியோரின் சொதப்பலான பேட்டிங் தான்.

பலவீனமான பலம்

பலவீனமான பலம்

9 போட்டியில் விளையாடியுள்ள கோலி, இதுவரை 128 ரன்கள் தான் அடித்துள்ளார். சராசரி 16. இதில் 2 முறை கோல்டன் டக். இதனால் கடந்த போட்டியில் கோலி தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் அப்போதும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதே போன்று மேக்ஸ்வெல்லும் 8, 26, 55, 23, 12, 0 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். தொடக்க வீரர்கள் சொதப்புவதால், அவருக்கும் நெருக்கடி ஏற்படுகிறது.

ஆர்சிபி நெருக்கடி

ஆர்சிபி நெருக்கடி

டுபிளஸில் பஞ்சாப்க்கு எதிராக 88 ரன்கள், லக்னோக்கு எதிராக 96 ரன்கள் அடித்தாலும் 5, 16,8, 8,5,23 ஆகிய ரன்கள் மட்டும் தான் அடித்து சரிவை கண்டுள்ளார். அப்படி இருந்தும் பெங்களூரு வெற்றி பெற்றதற்கு 2 ஆட்டங்களில் கார்த்திக்கின் அதிரடி ஆட்டம் தான் காரணமாக அமைந்துள்ளது. குஜராத் அணியை பொறுத்தவரை 8 போட்டியில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

முதலிடத்தில் குஜராத்

முதலிடத்தில் குஜராத்

இன்றைய ஆட்டத்தில் குஜராத் வென்றால் பிளே ஆப் சுற்று கிட்டதட்ட உறுதி. ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஷித் கான், திவேட்டியா அதிரடி ஆட்டம் விளையாடி கடைசி ஓவரில் 23 ரன்கள் விளாசினர். கப்பல் போல் போட்டி மூழ்கினாலும், அதிலிருந்து தப்பிக்கும் எலி போல் எப்படியாவது குஜராத் அணி வென்றுவிடுகின்றனர்.

கோலி Vs முகமது ஷமி

கோலி Vs முகமது ஷமி

கோலியை ஷமி 4 முறை ஐபிஎல் தொடரில் ஆட்டமிழக்க செய்துள்ளார். நடப்பு சீசனில் முகமது ஷமி பவர்பிளேவில் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஆனால் கோலியோ கடைசியாக 6 போட்டியில் ஒரு முறை தான் பவர்பிளேவை தாண்டி விளையாடி உள்ளார். மற்ற முறை எல்லாம் அதற்குள் நடையை கட்டிவிடுவார். இதனால் இன்றைய ஆட்டத்திலும் கோலியை ஷமி விரைவில் ஆட்டமிழக்க வைக்கலாம். அப்படி நடந்தால் அது கோலியின் இடத்துக்கே ஆபத்தை தரும். ரோகித் பிறந்தநாளன்று விராட் பட்டையை கிளப்புவாரா? விடை இன்று மதியம் 3.30 மணிக்கு தெரிந்துவிடும்.

Story first published: Saturday, April 30, 2022, 11:32 [IST]
Other articles published on Apr 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+