For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பாண்ட்யாவுக்கு துரோகம் செய்த பிசிசிஐ ? இளம் வீரரை காப்பாற்ற பாரபட்சம்.. கொந்தளித்த ரசிகர்கள்

பெங்களூரு: இளம் வீரர் ஒருவர் உடற்தகுதி தேர்வில் மோசமாக இருந்த போதும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

Recommended Video

IPL 2022: Hardik, Chahar, Ruturaj, Surykumar fitness update | OneIndia Tamil

வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளில் அனைத்து அணிகளும் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

ஒரு சில வீரர்கள் மட்டும் பயிற்சி முகாமிற்கு செல்லாமல் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தனர்.

உடற்தகுதி தேர்வுகள்

உடற்தகுதி தேர்வுகள்

ஹர்திக் பாண்ட்யா, ஷிகர் தவான், தீபக் சஹார், ருதுராஜ் கெயிக்வாட், உள்ளிட்ட பல இந்திய அணி வீரர்களும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஹர்திக் பாண்ட்யாவுக்கு கடுமையான நிபந்தனை இருந்தது. எனினும் அவர் தேர்ச்சி பெற்று அசத்தினார்.

ஒருவர் தேர்ச்சி பெறவில்லை

ஒருவர் தேர்ச்சி பெறவில்லை

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஓப்பனரான பிரித்வி ஷா மட்டும் யோ யோ டெஸ்டில் மோசமாக செயல்பட்டுள்ளார். ஒவ்வொரு வீரரும் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 16.5 மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால் பிரித்வி ஷா 15 மதிப்பெண்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்க முடியாத சூழல் உருவானது.

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரசிகர்கள் கொந்தளிப்பு

எனினும் இதில் தான் பிசிசிஐ ட்விஸ்ட் கொடுத்தது. பிரித்வி ஷா தாராளமாக ஐபிஎல்-ல் விளையாட அனுமதி கொடுத்துள்ளது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு மட்டும் தேர்ச்சி கட்டாயம் என ஒரு விதிமுறை பிரித்விக்கு ஒரு விதிமுறையா என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். இதனையடுத்து இதற்கான விளக்கத்தையும் பிசிசிஐ கொடுத்துள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

அதாவது பிசிசிஐ -ன் நேரடி ஊதிய ஒப்பந்தத்தில் சில வீரர்கள் இடம் பெற்றிருப்பார்கள். அதில் உள்ள ஹர்திக் பாண்ட்யா, கடந்த முறை ஐபிஎல்-ல் உடற்தகுதியுடன் உள்ளார் என மும்பை அணி ஏமாற்றியுள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டு ஏமாந்தது. எனவே தான் ஒப்பந்த வீரர்களுக்கு மட்டும் தேர்ச்சி கட்டாயம், பிரித்வி ஷா ஒப்பந்தத்தில் இல்லாத வீரர் தான். எனவே அது பிரச்சினை இல்லை எனக் கூறியுள்ளது.

Story first published: Thursday, March 17, 2022, 10:12 [IST]
Other articles published on Mar 17, 2022
English summary
Delhi capitals opener Prithvi shaw failed to clear Fitness test, Will Be Allowed To Play Anyway in IPL 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+