பிரித்வி ஷா -க்கு என்ன ஆனது? மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்.. டெல்லிக்கு புது நம்பிக்கை
மும்பை: டெல்லி அணி வீரர் பிரித்வி ஷாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை பார்த்து ரசிகர்கள் மனம் கலங்கியுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் முன்னணி அணியாக வலம் வந்த டெல்லி கேப்பிடல்ஸ், இந்தாண்டு சிக்கலில் உள்ளது.
இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 6 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

டெல்லி அணிக்கு சிக்கல்
தற்போதைக்கு ஆர்சிபி அணி 4வது இடத்தில் இருந்து வருகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இன்னும் மீதம் 2 போட்டிகள் உள்ளன. இந்த இரண்டிலுமே வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதன்படி அடுத்ததாக வரும் 16ம் தேதி திங்கட்கிழமையன்று பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் வாழ்வா? சாவா? என களமிறங்குகிறது.

பிரித்வி ஷாவின் உடல்நிலை
இந்நிலையில் டெல்லி அணிக்கு கூடுதல் பலமாக பிரித்வி ஷாவின் உடல்நிலை குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அந்த அணியின் அதிரடி ஓப்பனரான பிரித்வி ஷா கடந்த 3 போட்டிகளாக விளையாடவில்லை. டைப்பாய்ட் காய்ச்சல் தீவிரமாக இருந்ததால் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வெளியான புகைப்படம்
இந்த சூழலில் தற்போது அவர் அணிக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையில் இருப்பது போன்று பிரித்வி ஷா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காய்ச்சலில் இருந்து நன்கு குணமடைந்து வருகிறேன். உங்களின் ஆசியோடு விரைவில் ஆக்ஷனுக்கு திரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

சுவாரஸ்ய கட்டம்
புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி அணி 13 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் செல்ல வேண்டும். இதே போல தான் டெல்லி அணி நிலைமை. இதனால் 4வது இடத்திற்காக இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications