For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL இமாலய இலக்கு அடித்தும் பெங்களுரு தோல்வி.. பஞ்சாப் அணி பட்டாஸ் ஆட்டம்.. தவறு நடந்தது எங்கே?

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் 3வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Recommended Video

PBKS vs RCB: Punjab Kings Beat RCB By Five Wickets In A High Scoring Encounter | Oneindia Tamil

பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனாக மாயங் அகர்வாலும், பெங்களூரு அணிக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் டுபிளஸிஸ் களமிறங்கினர்.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த மைதானத்தில் இலக்குகளை துரத்துவது எளிதானது என்பதால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ரன் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது

அமைதியான தொடக்கம்

அமைதியான தொடக்கம்

ஆட்டம் தொடக்கத்தில் டுபிளஸிஸ் பொறுமையாக விளையாடினார். 11 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே டுபிளஸிஸ் அடிக்க, அதன் பிறகு தான் அதிரடியை தொடக்கினார். மறுமுனையில் தொடக்க வீரராக விளையாடிய 20 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, விராட் கோலி 3வது வீரராக களமிறங்கினார். இந்த நிலையில் டுபிளஸிஸ் 14 ரன்கள் எடுத்திருந்த போது அடித்த கேட்ச் வாய்ப்பை பஞ்சாப் அணியின் ஷாரூக்கான் தவறவிட்டார்.

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

இதனையடுத்து டுபிளஸிஸ் ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்தினார் . 30 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த டுபிளஸிஸ் ஆட்டமிழக்கும் போது 57 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார் இறுதியில் தினேஷ் கார்த்திக் தனது அதிரடி ஆட்டத்தை காட்டினார். 3 பவுண்டரி, 3 சிக்சர் என் பறக்கவிட்ட கார்த்திக், 14 பந்துகளில் 32 ரன்களை விளாசினார். விராட் கோலி தன் பங்கிற்கு 29 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி வீரர்கள் கடைசி 10 ஓவரில் 135 ரன்களை விளாசினர்.

 செம அடி

செம அடி

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினர். பஞ்சாப் அணி கேப்டன் மாயங் அகர்வால் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விரட்டி 24 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். மறுமுனையில் அனுபவ வீரர் ஷிகர் தவானும் அதிரடியை காட்டி ரன்களை குவிக்க, முதல் விக்கெட்டுக்கு பஞ்சாப் அணி 71 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் களமிறங்கிய இலங்கையை சேர்ந்த ராஜபக்சா 22 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். ஆட்டத்தின் 13வது ஓவரில் ராஜபக்சா, ராஜ் பவா என அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.

வாண வேடிக்கை

வாண வேடிக்கை

இறுதியில் ஷாரூக்கான் மற்றும் ஓடியன் ஸ்மித் ஜோடி இணைந்து ரன்களை குவித்தது. ஓடியன் ஸ்மித் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பெங்களூரு வீரர்கள் தவறவிட, அதுவே ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஸ்மித் 8 பந்துகளில் 25 ரன்கள் குவிக்க, அவருக்கு ஷாரூக்கான் துணை நின்று 24 ரன்கள் எடுத்தார். இதனால் பஞ்சாப் அணி 19வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு வித்திட்டது.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணி கேப்டன் டுபிளஸிஸ், பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடியதாக பாராட்டினார். முக்கிய கட்டத்தில் கேட்ச்களை விட்டது பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறிய டுபிளஸிஸ், ஆடகளத்தில் பனிப்பொழிவு இருந்ததால் பந்துவீச சிரமமாக இருந்ததாக டுபிளஸிஸ் கூறினார். கேப்டனாக முதல் போட்டியில் ஓடி ஓடி பந்துவீச்சாளர்களிடம் பேசி சோர்வு அடைந்துவிட்டதாக அவர் நகைச்சுவையாக கூறினார்.

Story first published: Sunday, March 27, 2022, 23:58 [IST]
Other articles published on Mar 27, 2022
English summary
IPL 2022 – Punjab beat Bangalore by 5 wickets and chasing big target IPL இமாலய இலக்கு அடித்தும் பெங்களுரு தோல்வி.. பஞ்சாப் அணி பட்டாஸ் ஆட்டம்.. தவறு நடந்தது எங்கே?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+