Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா.. இத்தனை சிக்சர்களா..?? பஞ்சாப் அணி அபாரம்.. 6வது இடம் தான் ராசி போல

மும்பை: ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் 2 பெரிய சாதனைகள் நடந்துள்ளது. சமிபிரதாய ஆட்டமாக இருந்த போட்டியில் பஞ்சாப் அணி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.

Recommended Video

Liam Livingstone மரண அடி.. SRH-ஐ வீழ்த்திய Punjab.. Points Table-ல் 6வது இடம் #Cricket

பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே 4 அணிகளும் தகுதி பெற்றுவிட்ட நிலையில், இன்று உப்புக்கு சப்பு இல்லாத இந்த ஆட்டத்தை சுமார் 26 லட்சம் பேர் ஹாட் ஸ்டாரில் கண்டு களித்தனர்.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பிரியாம் கார்க் 4 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

99வது விக்கெட்

99வது விக்கெட்

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ரபாடா 99வது விக்கெட்டை கைப்பற்றினார். அபிஷேக் சர்மா வழக்கம் போல் அதிரடியாக விளையாடி 32 பந்தில் 43 ரன்கள் விளாசினார். இதில் 2 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் நடப்பு சீசனில் 400 ரன்கள் மேல் அபிஷேக் சர்மா அடித்தார். இந்திய அணியில் இடம் கிடைக்காத ராகுல் திரிபாதி 20 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே அடித்தார்.

ஒரே ஓவரில் 3 விக்கெட்

ஒரே ஓவரில் 3 விக்கெட்

ஏய்டன் மார்க்ரம் 21 ரன்களிலும், நிக்கோலஸ் பூரான் 5 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஐதராபாத் அணி சரிவை நோக்கி சென்றது. இறுதியில் வாசிங்டன் சுந்தர் 25 ரன்களிலும், ரோமரியோ ஷிஃபர்ட் 2 சிக்சர்கள், 2 பவுண்டரி என 26 ரன்களும் எடுத்தனர். எனினும் இறுதி ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணியின் நாதன் எலிஸ், ஹர்பித் பிரார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தவான் சாதனை

தவான் சாதனை

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் பாரிஸ்டோ, தவான் ஜோடி பட்டையை கிளயப்பியது. பாரிஸ்டோ 23 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிகர் தவான் 39 ரன்கள் விளாசினார். இத்ன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 700 பவுண்டரி அடித்த முதல் வீரர் என்ற பெருமையை தவான் படைத்தார். தமிழக வீரர் ஷாரூக்கான் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 10 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

1000 சிக்சர்

1000 சிக்சர்

கேப்டன் அகர்வால் 1 ரன்னில் வெளியேற, லியம் லிவங்ஸ்டோன் பட்டையை கிளப்பினார். 5 இமாலய சிக்சர்கள் அடித்தன் மூலம் 22 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து லிவிங்ஸ்டோன் அசத்தினார். இதன் மூலம் பஞ்சாப் அணி 15.1வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் தொடர்ந்து 4வது முறையாக புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி 6வது இடத்துடன் நிறைவு செய்துள்ளது. இந்த போட்டியில் அடிக்கப்பட்ட சிக்சர்கள் மூலம் ஒரே சீசனில் ஆயிரம் சிக்சர் அடிக்கப்பட்ட தொடர் என்ற பெருமையை இந்த சீசன் பெற்றது.

Story first published: Sunday, May 22, 2022, 23:34 [IST]
Other articles published on May 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+