Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் – பஞ்சாப் Vs பெங்களூரு : டாஸ் வென்றது யார்? பிளேயிங் லெவன்- பிட்ச் ரிப்போர்ட்

மும்பை : ஐபிஎல் 3வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இரண்டு அணிகளுமே புதிய கேப்டன்களுடன் களமிறங்குகின்றனர்.

பெங்களூரு அணியில் பல ஆண்டுக்கு பிறகு விராட் கோலி சாதாரண வீரராக களமிறங்குகிறார். இதே போன்று சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த டுபிளஸிஸ், பெங்களூரு அணியின் கேப்டனாக களமிறங்கினார்.

நவி மும்பையில் உள்ள டி.ஓய். பாட்டில் மைதானத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.

நவி மும்பை

நவி மும்பை

இதில், 17 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் 10 போட்டியில் வென்றுள்ளது. இந்த ஆடுகளம் பொதுவாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும், தொய்வாகவும் காணப்படும். இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி சராசரியாக 147 ரன்களே அடித்துள்ளன. பனிப்பொழிவும் ஆட்டத்தின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

வெளிநாட்டு வீரர்கள்

இதன் காரணமாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் வெளிநாட்டு வீரர்களாக லிவிங்ஸ்டோன், ராஜபக்சா,ஓடீயன் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களுரு அணியில் வெளிநாட்டு வீரர்களாக டுபிளஸிஸ், ருத்தசர்ஃபுர்ட், டேவிட் வில்லி, ஹசரங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆர்சிபி Vs பஞ்சாப்

பஞ்சாப் அணியில் கேப்டனாக களமிறங்கியுள்ள மாயங் அகர்வால் இதுவரை சீனியர் கிரிக்கெட்டில் 4 முறை மட்டுமே கேப்டன் பதவி வகித்துள்ளார். இதே போன்று பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் டுபிளஸிஸ் முதலிடத்தில் உள்ளார். இதுவரை பஞ்சாப் அணிக்கு எதிராக 7 முறை அரைசதம் அடித்துள்ளார். சராசரி 60 ஆகும்.

பிளேயிங் லெவன்

பெங்களுரு அணியில் டுபிளஸில், அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ருத்தர்ஃபோர்ட், டேவிட் வில்லி, ஹசரங்கா, சபாஸ் அகமது, ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், ,ஆகாஷ் தீப்

பஞ்சாப் அணி மாயங் அகர்வால்,ணிகர் தவான், லிவிங்ஸ்டோன், ராஜபக்சா, ஷாரூக்கான், ராஜ் பவா, பிரார், ஓடியன் ஸ்மித், ஆர்சிதிப், சந்தீப், ராகுல் சாஹர்

Story first published: Sunday, March 27, 2022, 19:52 [IST]
Other articles published on Mar 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+