Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிகாக்கின் ருத்ர தாண்டவம்.. பரிதாப நிலைக்கு சென்ற டெல்லி.. லக்னோ அணி அபார வெற்றி!

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னரின் வீக் பாயிண்ட் என்பது தெரியவந்துள்ளது.

15வது லீக் போட்டியில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது.

டெல்லி அணி தொடக்கம்

டெல்லி அணி தொடக்கம்

தொடக்க வீரர் பிரித்வி ஷா ஆட்டத்தின் முதல் பந்து முதலே அடுத்தடுத்து சிக்ஸர், பவுண்டரி என விளாசி அமர்களப்படுத்தினார். 34 பந்துகளை சந்தித்த அவர் 61 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு ஓப்பனிங் வீரர் டேவிட் வார்னர் 12 பந்துகளில் வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்த ரோவ்மென் போவெல் 3 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

மிடில் ஆர்டர் பார்ட்னர்ஷிப்

மிடில் ஆர்டர் பார்ட்னர்ஷிப்

இதனால் டெல்லி அணி 74 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் சர்ஃபராஸ் கான் ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். கேப்டன் ரிஷப் பண்ட் 39 ரன்களும், சஃப்ராஸ் கான் 36 ரன்களும் எடுக்க, 20 ஓவர்களில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது.

அட்டகாச தொடக்கம்

அட்டகாச தொடக்கம்

சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியில் ஓப்பனிங் ஜோடியான கே.எல்.ராகுல் - டிகாக் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 73 ரன்களை சேர்த்தனர். கேப்டன் ராகுல் 24 ரன்களுக்கு வெளியேற குயிண்டன் டிக்காக் தூண் போன்று நிலைத்து 52 பந்துகளில் 80 ரன்களை விளாசினார். இதன் பின்னர் வந்த எவின் லீவிஸ் 5 ரன்கள், தீபக் ஹூடா 11 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர்.

கடைசி அதிரடி

கடைசி அதிரடி

கடைசியில் க்ருணால் பாண்ட்யா 14 பந்துகளில் 19 ரன்கள்உம், ஆயுஸ் பதோனி 3 பந்துகளில் 10 ரன்களும் விளாசி ஃபனைல் டச் கொடுத்தனர். இதனால் 19.4 ஓவர்களில் லக்னோ அணி 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. லக்னோ அணிக்கு இது 3வது வெற்றியாகும்.

Story first published: Friday, April 8, 2022, 11:37 [IST]
Other articles published on Apr 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+