For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னா மனுஷன்யா..!!! குயிண்டன் டிக்காக் செய்த விஷயம்.. நடுவர்களே நெகிழ்ந்து போன சம்பவம்!!

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குயிண்டன் டிக்காக் செய்த ஒரு விஷயத்தால் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

ஐபிஎல் 42ஆவது லீக் போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி சீரான வேகத்தில் ரன் உயர்த்தியது.

லக்னோ அணி சொதப்பல்

லக்னோ அணி சொதப்பல்

அந்த அணியின் ஓப்பனிங் வீரர் குயிண்டன் டிக்காக் 46 ரன்களும், தீபக் ஹூடா 34 ரன்களும் அடித்தனர். மற்ற எந்த வீரருமே பெரியளவில் சோபிக்கவில்லை. கேப்டன் ராகுல் 6, க்ருணால் பாண்ட்யா 7, ஸ்டோய்னிஸ் 1 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்களை குவித்தது.

சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

இந்நிலையில் லக்னோ இன்னிங்ஸின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஆட்டத்தின் 13வது ஓவரை சந்தீப் ஷர்மா வீச, குயிண்டன் டிக்காக் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அப்போது 4வது பந்தை டி காக் அடித்த பந்து எட்ஜாகி கீப்பர் ஜிதேஷ் ஷர்மாவின் கைகளுக்குள் சென்றது. இதற்கு பவுலர் மற்றும் கீப்பர் மிக உறுதியாக அவுட் எனக்கூறினர்.

நடுவர் தீர்ப்பு

நடுவர் தீர்ப்பு

ஆனால் அதனை எதையுமே ஏற்காத நடுவர், டிக்காக்கிற்கு நாட் அவுட் என்ற முடிவை தான் கொடுத்தார். எனினும், தான் அவுட்தான் என்பதை தெரிந்த டிக்காக், நியாயமாக நடந்துக்கொள்ளும் வகையில் திடீரென களத்தில் இருந்து வெளியேறினார். இதனை கண்டு நடுவர்கள் மட்டுமின்றி எதிரணி வீரர்களுமே வியந்து பார்த்தனர்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

37 பந்துகளை சந்தித்திருந்த டிக்காக் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களை அடித்தார். அவர் நிலைத்து நின்றிருந்தால் ஸ்கோரை உயர்த்திருக்கலாம். ஆனால் உண்மையான ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் என்றால் இன்று டிக்காக் செய்த விஷயம் தான் என இணையத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். டிக்காக் வெளியேறிய போது, அவருக்காக மைதானத்தில் இருந்து பார்வையாளர்கள் எழுந்து நின்று கை தட்ட ஆரம்பித்தார்கள்.

Story first published: Friday, April 29, 2022, 23:29 [IST]
Other articles published on Apr 29, 2022
English summary
Quinton de Kock's sportsmanship ( குயிண்டன் டிக்காக் நாட் அவுட் ) பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி குயிண்டன் டிக்காக் செய்த விஷயம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+