
2021 அதிக விக்கெட்
இருப்பினும் அஸ்வின், கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அஸ்வினுக்கு ஒரு தடை உருவானால், அதனை எப்படி உடைத்து வெளியேற வேண்டும் என்று நன்கு தெரியும். அதற்காக ஸ்கெட்ச் போட்டு வேலை செய்பவர். கிரிக்கெட்டை அறிவியல் மற்றும் மனத்தத்துவ ரீதியில் எதிர்கொள்ளும் மேஜிசியன்.

பந்துவீச்சில் மாற்றம்
உடல்தகுதியால் அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த அஸ்வின், தனது பழைய டிரைனர் மூலம் உடல் எடையை குறைத்து ஃபிட் ஆனார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஜொலிப்பதற்காகவே தனது பந்துவீச்சிலும் பல புதிய முறைகளை கொண்டு வந்தார். இதன் பலனாக அவர் கடந்த சீசனில் கலக்கினார்.

டி20 உலக கோப்பை
இதனால் அஸ்வினுக்கு மீண்டும் டி20 இந்திய அணி, ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பங்கேற்று அசத்தினார். இதன் மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அஸ்வின் சாதனை
தற்போது ஐபிஎல் தொடரிலும் பந்துவீச்சு, பேட்டிங் என அஸ்வின் கலக்கி வருகிறார். ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு சாஹ்ல், அஸ்வின் ஜோடியின் கூட்டணியே காரணம் என்று போற்றப்படுகிறது. இந்த நிலையில், அனைத்து விதமான டி20 கிரிக்கெட்டில் 271 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். பியூஸ் சாவ்லா 270 விக்கெட்டுடன் 2வது இடத்திலும், சாஹ்ல் 265 விக்கெட்டுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











