Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு ஆண்டுக்கு மட்டுமே கேப்டன் பதவி.. டூப்ளசிஸை வைத்து ஆர்சிபி போட்ட திட்டம்.. அஸ்வின் ஓபன் டாக்!!

மும்பை: ஆர்சிபி அணி டூப்ளசிஸை கேப்டனாக நியமித்தது ஒரு வருடத்திற்கு மட்டும் போட்டுள்ள பிளான் என அஸ்வின் கூறியுள்ளார்.

Recommended Video

Faf Du Plessis ஒரு வருஷம் தான் RCB Captain ஆக இருப்பார் - Ashwin

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ளது.மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இந்தாண்டு பல அணிகளும் புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய நிலையில், ஆர்சிபி அணி தனி கவனம் ஈர்த்துள்ளது.

ஆர்சிபி கேப்டன்

ஆர்சிபி கேப்டன்

மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இனி விராட் கோலி கேப்டன்சி அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக விளையாடலாம் என வல்லுநர்கள் கூறி வருகின்றனர். ஒருபுறம் ஆர்சிபி கோப்பையை வெல்லுமா என்றும், மற்றொரு புறம் கோலியின் பழைய பேட்டிங் திரும்புகிறது என்றும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அஸ்வினின் விளக்கம்

அஸ்வினின் விளக்கம்

இந்நிலையில் விராட் கோலியை மீண்டும் கேப்டனாக பார்க்கலாம் என அஸ்வின் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், டூப்ளசிஸை கேப்டனாக கொண்டு வந்தது சிறந்த தேர்வு. ஐபிஎல்-ல் நிறைய அனுபவம் உள்ளது. சிஎஸ்கே கேப்டன் தோனியின் சாயல், டூப்ளசிஸுன் கேப்டன்சியில் பார்க்கலாம். எனினும் அவர் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் தான் ஐபிஎல் -ல் விளையாடுவார்.

அடுத்த ஆண்டு

அடுத்த ஆண்டு

விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக கேப்டன் பதவியால் நிறைய மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த வருடம் அவருக்கு ஒரு சிறிய இடைவெளியாக இருக்கலாம். எனினும் அடுத்த அண்டு ஆர்சிபி நிர்வாகம் கோலியை மீண்டும் கேப்டனாக நியமிக்கும். என்னுடைய கணிப்பு இப்படி தான் கூறுகிறது என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி பதில்

விராட் கோலி பதில்

கடந்த சீசனில் கோலி பதவி விலகிய போதே, " இதுதான் கேப்டனாக என்னுடைய கடைசி ஐபிஎல் எனக்கூறியிருந்தார். மேலும் ஓய்வு பெறும் வரை ஆர்சிபி அணி வீரராகவே இருந்துவிட்டு செல்வேன் என்றும் தெரிவித்தார். எனவே அஸ்வின் கூறியதை போன்று எதிர்காலத்தில் கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது .

Story first published: Thursday, March 24, 2022, 12:07 [IST]
Other articles published on Mar 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+