Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் ஒரு போட்டியில் தோற்றாலும் அவ்வளவுதான்.. சிஎஸ்கேவுக்கு வந்த புது சிக்கல்.. சீனியர் எச்சரிக்கை

மும்பை: சென்னை அணி ப்ளே ஆஃப் கனவு முன்கூட்டியே முடிந்துவிடும் என முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி, இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியாக மாறியுள்ளது.

நடப்பு தொடரின் முதல் மூன்று போட்டிகளிலுமே சென்னை அணி தோல்வியை சந்தித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சிஎஸ்கேவின் நிலைமை

சிஎஸ்கேவின் நிலைமை

கேப்டன்சி மாற்றம், முதல் போட்டியில் மொயீன் அலி இல்லாதது, பவுலிங்கில் தீபக் சஹார் இல்லாதது, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ப்ளேயிங் 11ல் இல்லை என பல்வேறு பின்னடைவுகள் சிஎஸ்கேவுக்கு இருந்து வருகிறது. இப்படியே போனால் என்ன ஆவது என சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆர்.பி.சிங் எச்சரிக்கை

ஆர்.பி.சிங் எச்சரிக்கை

இந்நிலையில் சிஎஸ்கேவுக்கு முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், 3 போட்டிகளில் தோல்வியடைந்ததில் இருந்து சிஎஸ்கேவின் நிலைமை புரிகிறது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட அவர்கள் டாப் 4 அணிகளில் இடம்பிடித்து ப்ளே ஆஃப் செல்வது கடினமாகிவிடும். ஏனென்றால் அவர்களின் ரன் ரேட் மிகவும் மோசமாக சென்றுவிட்டது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்தாண்டு 10 அணிகள் விளையாடுவதால், எத்தனை புள்ளிகள் எடுத்தால் ப்ளே ஆஃப்-க்கு தகுதி என கணிக்க முடியவில்லை. இதனால் ஒவ்வொரு போட்டியையும் முக்கியமாக கருதி ஆட வேண்டும். சிஎஸ்கேவின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் எதுவுமே சரியில்லை. அவர்கள் ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வது போன்றே தெரியவில்லை. இதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கேவின் போட்டிகள்

சிஎஸ்கேவின் போட்டிகள்

சென்னை அணி அடுத்ததாக வரும் ஏப்ரல் 9ம் தேதியன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இன்னும் 5 நாட்கள் இருப்பதால், அணிக்கு தேவையான மாற்றங்களை செய்து, புத்துணர்ச்சியுடன் களமிறங்க தோனி வழிவகை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, April 4, 2022, 21:20 [IST]
Other articles published on Apr 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+