Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நொடி வரை பரபரப்பு.. ராகுல் தேவட்டியா கொடுத்த சூப்பர் ட்விஸ்ட்.. குஜராத் அணி த்ரில் வெற்றி!

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது.

16வது லீக் போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

மும்பை பிராபேர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணீ பந்துவீச்சை தேர்வு செய்தது.

 தொடக்கமே சரிவு

தொடக்கமே சரிவு

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் ஓப்பனிங்கில் கேப்டன் மயங்க் அகர்வாலே ஏமாற்றினார். அவர் 5 ரன்களுக்கு வெளியேறிய, முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய பேர்ஸ்டோ 8 ரன்களுக்கு நடையை கட்டினார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் - லியாம் லிவிங்ஸ்டன் ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தியது. தவான் 30 பந்துகளில் 35 ரன்களும், லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 64 ரன்களை விளாசித்தள்ளினர்.

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

பின்னர் வந்த ஷாருக்கான் 15 ரன்கள், ஒடியன் ஸ்மித் டக் அவுட், ரபாடா 1 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் ராகுல் சஹார் மட்டும் 14 பந்துகளில் 22 ரன்களை சேர்க்க 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை சேர்த்தது.

கில் சிறப்பான ஆட்டம்

கில் சிறப்பான ஆட்டம்

190 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியில் ஓப்பனிங் வீரர் மேத்யூவ் வேட் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். முதல் விக்கெட் போனாலும் மற்றொரு புறம் தூண் போன்று நின்ற சுப்மன் கில் - அறிமுக வீரர் சாய் சுதர்ஷன் ஜோடி பஞ்சாப் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 2வது விக்கெட்டிற்கு மட்டும் இந்த ஜோடி 101 ரன்களை சேர்த்தது.

பரபரப்பு கட்டம்

பரபரப்பு கட்டம்

ஒருகட்டத்தில் சாய் சுதர்சன் 35 ரன்களுக்கு வெளியேறினார். சிறப்பாக ஆடி வந்த சுப்மன் கில் 96 ரன்களுக்கு அவுட்டாகி சதத்தை தவறவிட்டார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 27 ரன்களுக்கு ரன் அவுட்டானார். இதனால் 2 பந்துகளில் அந்த அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. பாண்ட்யா, மில்லர் என எந்த அதிரடி ஆட்டக்காரரும் இல்லை. அப்போது களத்திற்கு வந்த ராகுல் தேவட்டியா அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார்.

கடைசி நேர மேஜிக்

கடைசி நேர மேஜிக்

ஒடியன் ஸ்மித் விசிய கடைசி ஓவரின் 5வது பந்தை சிக்ஸருக்கு தெறிக்கவிட்டு அசத்தினார். இதனால் கடைசி ஒரு பந்தில் 6 ரன்கள் தேவை. சுற்றியும் ஃபீல்டர்கள், ஸ்லோவர் பந்து வரலாம் என ரசிகர்கள் நகம் கடித்து வந்தனர். எனினும் கடைசி பந்தில் ராகுல் தேவட்டியாக சிக்ஸரை விளாசி த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

Story first published: Friday, April 8, 2022, 23:52 [IST]
Other articles published on Apr 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+