Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை

மும்பை: ஐபிஎல் தொடரில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் உள்ள ஐதராபாத் அணி, மும்பை அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இரண்டு அணியின் பிளேயிங் லேவனிலும், இரு மாற்றங்கள் செய்யப்பட்டன.

வில்லியம்சன் மோசமான பார்மில் இருப்பதால் அவர் தொடக்க வீரராக களமிறங்கவில்லை. வில்லியம்சனுக்கு மாற்றாக பிரியம் கார்க் தொடக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் இணைந்தார்.

அதிரடி பவர்பிளே

அதிரடி பவர்பிளே

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 9 ரன்களில் வெளியேறினார். இதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த பிரியம் கார்க் மற்றும் ராகுல் திரிபாதி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக பும்ரா ஓவரிலேயே 15 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் பவர்பிளேவில் ஐதராபாத் அணி 57 ரன்களை விளாசி இருந்தது.

அசத்திய திரிபாதி

அசத்திய திரிபாதி

பிரியம் கார்க் 26 பந்துகளில் 42 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். மறுமுனையில் ராகுல் திரிபாதி ரன் குவிக்கும் வேகத்தை அதிகரிக்க, 32 பந்தில் அரைசதம் அடித்தார். ஐதராபாத் அணி 10.1வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. சிறப்பாக விளையாடிய ராகுல் திரிபாதி 44 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்சர், 9 பவுண்டரிகள் அடங்கும்.

பந்துவீச்சில் கலக்கல்

பந்துவீச்சில் கலக்கல்

இதன் பின்னர் நிக்கோலஸ் பூரானும் தன் பங்கிற்கு 22 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார். ஐதராபாத் ஸ்கோர் 200 ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை வீரர் ரமன்தீப் சிங் 18வது ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி 2 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். இதனால் ஆட்டம் மாறியது.

ஐபிஎல் சாதனை

ஐபிஎல் சாதனை

கடைசி கட்டத்தில் ஐதராபாத் அணியின் வில்லியம்சன் உள்ளிட்டோர் பவுண்டரி விளாச திணறினர். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 193 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் கடைசி 5 ஓவரில் ஐதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இந்த இன்னிங்சில் சிக்சர்கள் விளாசியதன் மூலம் நடப்பு சீசனில் 900 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதில் மும்பை மட்டுமே 100 சிக்சரை முதல் முறையாக விட்டு கொடுத்துள்ளது.

Story first published: Tuesday, May 17, 2022, 21:55 [IST]
Other articles published on May 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+