Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெத்து காட்டிய சிஎஸ்கே.. ஆர்சிபி வீரர்களை ஓட விட்ட உத்தப்பா..துபே சிக்சர் மழை.. சிஎஸ்கே புதிய சாதனை

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் வாண வேடிக்கை காட்டினர்.

நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த சிஎஸ்கே அணி, ஆர்சிபி அணியால் பேட்டிங் செய்ய பணித்தது.

பவுலிங் படுமோசம் என்பதால் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டனர்.

ருத்துராஜ் ஏமாற்றம்

ருத்துராஜ் ஏமாற்றம்

தொடக்கத்தில் சிஎஸ்கே வீரர் கெய்க்வாட் அதிரடியாக விளையாட முற்பட்டார். 3 பவுண்டரிகளை விளாசிய அவர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின் மொயின் அலி களத்துக்கு வந்தார். ஆனால் அவர் 3 ரன்கள் எடுத்திருந்த போது, ஆர்சிபி வீரரின் சிறப்பான ஃபில்டிங்கால் ரன் அவுட் ஆனார்.சிஎஸ்கே அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

சிக்சர் மழை

சிக்சர் மழை

இதன் பின்னர் ராபின் உத்தப்பா தனது வழக்கமான அதிரடியை காட்டினார் .முதலில் அவ்வப்போது பவுண்டரி அடித்த இந்த ஜோடியால் சிஎஸ்கே அணி 10 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அதன் பின்னர் தான் இந்த ஜோடி பீஸ்ட் மோடுக்கு சென்றது. மேக்ஸ்வெல் வீசிய 13வது ஓவரில் உத்தப்பா 3 சிக்சர்களை விளாசினார்.

சதம் மிஸ்

சதம் மிஸ்

சிவம் துபேவும் அதிரடியில் இணைய, இந்த ஜோடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தது. இதனால் 15வது ஓவரில் சிஎஸ்கே அணி 133 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. இதன் பின்னரும், இந்த ஜோடி அதிரடியை நிறுத்தவில்லை. ஓவ்வொரு ஓவரிலும் 12 ரன்கள், 15 ரன்கள் என இந்த ஜோடி அடித்தது. சிறப்பாக விளையாடிய உத்தப்பா 89 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே சாதனை

சிஎஸ்கே சாதனை

இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. துபே 18 ஓவரில் சிக்சர், பவுண்டரி என விளாச ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது. ஜடேஜா டக் அவுட்டாக அதிரடி காட்டிய துபே 46 பந்துகளில் 95 ரன்கள் விளாசினார். இதன் மூலம் சிஎஸ்கே அணி நடப்பு சீசனின் அதிகபட்ச ஸ்கோராக 216 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே மொத்தமாக 17 சிக்சர் விளாசியது. இது சிஎஸ்கேவின் அதிகபட்ச சிக்சராகும்

Story first published: Tuesday, April 12, 2022, 21:51 [IST]
Other articles published on Apr 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+