Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா.. ஒரே சீசனில் 3வது சதம்.. ஜாஸ் பட்லரின் சாதனை.. இமாலய இலக்கை எட்டிய ராஜஸ்தான்

மும்பை: ஐபிஎல் தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருந்த ராஜஸ்தானும், 6வது இடத்தில் இருந்த டெல்லி அணியும் மோதின.

Recommended Video

DC vs RR : Jos Buttler slams third century of IPL 2022 | Oneindia Tamil

டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீசுவதாக தெரிவித்தது. இதனையடுத்து பெரிய இலக்கை குவிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் ராஜஸ்தான் இருந்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய படிக்கல், பட்லர் ஜோடி ஆரம்பம் முதலே சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லிக்கு நெருக்கடி தந்தனர்.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

முதலில் 3வது கியரில் வண்டியை ஓட்டுவது போல் நிதானமாக ஆடி பவர்பிளேவில் விக்கெட்டை இழக்காமல் ரன்களை சேர்த்தது ராஜஸ்தான் அணி. இதனால் பவர்பிளேவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்தது. 41 பந்தில் தான் அணியே 50 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் அதிரடியை பட்லர் காட்ட தொடங்கினார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

4 பவுண்டரி, 4 சிக்சர் விளாசிய பட்லர் 36 பந்துகளில் அரைசதம் எடுத்தார். படிக்கல்லும் நல்ல கம்பெனி தர 11வது ஓவர் முடிவதற்குள்ளே ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. படிக்கல்லும் அதிரடியில் இறங்க 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

57 பந்துகளில் சதம்

57 பந்துகளில் சதம்

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்களை விளாசியது. படிக்கல் 54 ரன்களில் கலில் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் சஞ்சு சாம்சனும் களத்தில் குதித்து அதிடியை காட்டினார். சிறப்பாக விளையாடிய பட்லர் 57 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 6 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும்.

ராஜஸ்தான் சாதனை

ராஜஸ்தான் சாதனை

இதன் மூலம் நடப்பு சீசனில் பட்லர் 3 சதம், நடப்பு தொடரில் 400 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஜாஸ் பட்லர் பெற்றார். சஞ்சு சாம்சனும் தன் பங்கிற்கு 19 பந்தில் 46 ரன்கள் குவிக்க, 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. பட்லர் 116 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் நடப்பு சீசனில் அதிகபட்ச டீம் ஸ்கோர், தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் என இரண்டு சாதனையையும் ராஜஸ்தான் படைத்தது.

Story first published: Saturday, April 23, 2022, 0:34 [IST]
Other articles published on Apr 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+