
பொறுப்பான ஆட்டம்
முதலில் நிதானமாக ஆடி பவர்பிளேவில் விக்கெட்டை இழக்காமல் ரன்களை ராஜஸ்தான் அணி சேர்த்தது. இதனால் பவர்பிளேவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்தது. 41 பந்தில் தான் அணியே 50 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் அதிரடியை பட்லர் காட்ட தொடங்கினார். 4 பவுண்டரி, 4 சிக்சர் விளாசிய பட்லர் 36 பந்துகளில் அரைசதம் எடுத்தார். படிக்கல்லும் நல்ல கம்பெனி தர 11வது ஓவர் முடிவதற்குள்ளே ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. படிக்கல்லும் அதிரடியில் இறங்க 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

57 பந்துகளில் சதம்
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்களை விளாசியது. படிக்கல் 54 ரன்களில் கலில் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் சஞ்சு சாம்சனும் களத்தில் குதித்து அதிடியை காட்டினார். சிறப்பாக விளையாடிய பட்லர் 57 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 6 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் நடப்பு சீசனில் பட்லர் 3 சதம், அடித்துள்ளார். சஞ்சு சாம்சனும் தன் பங்கிற்கு 19 பந்தில் 46 ரன்கள் குவிக்க, 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. பட்லர் 116 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் நடப்பு சீசனில் அதிகபட்ச டீட் ஸ்கோர், தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் என இரண்டு சாதனையையும் ராஜஸ்தான் படைத்தது.

வீணான தொடக்கம்
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்கமும் சிறப்பாக இருந்தது. பிரித்வி ஷா 37 ரன்களும், வார்னர் 28 ரன்களும் அடிக்க, சர்பிராஸ் கான் 1 ரன்னில் ஆட்டமிழந்து டெல்லி ரசிகர்களை ஏமாற்றினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட், லலித் யாதவ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.

கடைசி ஓவரில் த்ரில்லர்
சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட், 44 ரன்களும், லலித் 37 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். இதனால் கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. பொவேல் முதல் 3 பந்தை சிக்சருக்கு விரட்டினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொள்ள, அடுத்த 3 பந்தையும் பெரிய ஷாட் அடிக்க முடியவில்லை. இதனால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


Click it and Unblock the Notifications











