For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சிங்கம் களமிறங்கிடுச்சி”.. ஐபிஎல்-க்கு மீண்டும் வரும் மலிங்கா.. லேட் என்ட்ரியால் ரசிகர்கள் உற்சாகம்

மும்பை: முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்த லசித் மலிங்கா மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.

Recommended Video

IPL 2022: Lasith Malinga Returns To IPL, Joins Rajasthan Royals Coaching Staff | Oneindia Tamil

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது. அட்டவணை சமீபத்தில் வெளியானது.

இன்னும் 2 வாரங்கள் மட்டுமே இருப்பதால் ஒவ்வொரு அணியும் தங்களது ஜெர்ஸி, அணி விவரம், லோகோ என முக்கிய மாற்றங்களை அறிவித்து வருகிறது.

 மலிங்கா என்ட்ரி

மலிங்கா என்ட்ரி

இந்நிலையில் இலங்கை முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா தாமத என்ட்ரியாக ஐபிஎல் தொடருக்குள் நுழைந்துள்ளார். இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது. அந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு என்று முதல் முறையாக கோச்சை நியமித்துள்ளது

அசைக்க முடியா பெருமை

அசைக்க முடியா பெருமை

38 வயதாகும் லசித் மலிங்கா, கடந்தாண்டு அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக இன்னமும் மலிங்கா திகழ்ந்து வருகிறார். 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதே போல ஐபிஎல்-ல் ஒரே ஒரு அணிக்காக மட்டும் விளையாடியவர்கள் வெகு சிலர் தான். அதில் மலிங்காவும் ஒருவர். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வந்த அவர், 5 முறை கோப்பையை வென்ற போதும் உடன் இருந்துள்ளார்.

எந்தெந்த வீரர்களுக்கு பயிற்சி

எந்தெந்த வீரர்களுக்கு பயிற்சி

ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் என்றால், நவ்தீப் சைனி, பிரஷித் கிருஷ்ணா, ட்ரெண்ட் போல்ட், ஒபெட் மெக்காய் உள்ளிட்டோர் உள்ளனர். இவர்கள் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் கலக்கி வருகின்றனர். இதனால் லசித் மலிங்கா போன்ற ஒருவர் இவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் போது கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

கிடைக்கும் கூடுதல் அதிர்ஷ்டம்

கிடைக்கும் கூடுதல் அதிர்ஷ்டம்

மலிங்காவுக்கு நீண்ட ஐபிஎல் அனுபவம் உள்ளதால் ஒவ்வொரு அணி மற்றும் வீரர்கள் பற்றி தெரியும். குறிப்பாக தோனி, ரோகித் சர்மா, விராட்கோலி போன்றோரின் வியூகங்கள் மற்றும் பலவீனத்தை நன்கு அறிந்தவர். இதனால் ராஜஸ்தான் அணிக்கு ஒரு ஆலோசகராகவும் மலிங்கா திகழவுள்ளார்.

Story first published: Friday, March 11, 2022, 16:27 [IST]
Other articles published on Mar 11, 2022
English summary
Lasith Malinga appointed as fast bowling coach for Rajasthan royals Team, ahead of IPL 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+