For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை.. ப்ளே ஆஃப் அருகில் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப்பை வீழ்த்தியது எப்படி??

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியடைந்ததால் பெரும் ரிஸ்க்கில் உள்ளது.

இரு அணிகளும் மோதிய 52வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து சிறப்பான ஸ்கோரை அடித்தது.

பஞ்சாப் பேட்டிங்

பஞ்சாப் பேட்டிங்

தொடக்க வீரர்களாக களமிறங்கிய பேர்ஸ்டோ - ஷிகர் தவான் ஜோடி அதிரடியாக ரன்குவித்தனர். எனினும் தவான் 12 ரன்களுக்கு அவுட்டானதால் 47 ரன்களுக்கெல்லாம் ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது. இதன் பின்னர் வந்த பனுக்கா ராஜபக்ச 27 ரன்கள், மயங்க் அகர்வால் 15 ரன்கள் என சொதப்ப பஞ்சாப் அணியின் ரன் ரேட் பின்னடைவை சந்தித்தது.

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

மறுமுணையில் தூண் போன்று நிலைத்து நின்ற ஜானி பேர்ஸ்டோ 56 ரன்களை சேர்த்தார். கடைசி நேரத்தில் ஜித்தேஷ் சர்மா 18 பந்துகளில் 38 ரன்களும், லிவிங்ஸ்டன் 14 பந்துகளில் 22 ரன்களும் சேர்த்ததால் 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்களை குவித்தது.

ராஜஸ்தான் இன்னிங்ஸ்

ராஜஸ்தான் இன்னிங்ஸ்

190 என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கும் அட்டகாசமான தொடக்கம் வந்தது. ஓப்பனிங் வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 68 ரன்கள், ஜாஸ் பட்லர் 30 ரன்களும் விளாசினர். இதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்களுக்கு வெளியேறியதால், கடைசி 34 பந்துகளில் 79 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது.

கடைசி நேர பார்ட்னர்ஷிப்

கடைசி நேர பார்ட்னர்ஷிப்

அப்போது கைக்கோர்த்த தேவ்தத் பட்டிக்கல், சிம்ரான் ஹெட்மெயர் ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பட்டிக்கல் 31 ரன்களும், சிம்ரான் ஹெட்மெயர் 31 ரன்களும் அடிக்க ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

 பஞ்சாப் அணிக்கு சிக்கல்

பஞ்சாப் அணிக்கு சிக்கல்

இதுவரை 11 போட்டிகளில் ஆடியுள்ள ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளை பெற்றுவிட்டது. இனி வரும் 3 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றால் கூட் ப்ளே ஆஃப் சென்றுவிடும். ஆனால் பஞ்சாப் அணி 11 போட்டிகளில் 10 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. எனவே இனி வரும் 3 போட்டிகளிலுமே அந்த அணிக்கு அபார வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

Story first published: Saturday, May 7, 2022, 19:44 [IST]
Other articles published on May 7, 2022
English summary
Rajasthan royals beats punjab kings ( பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ) பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு வெற்றி பெற்றது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+