Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திடீரென்று ரிட்டயர் ஆன அஸ்வின்.. ராஜஸ்தான் செய்த தில்லாலங்கடி வேலை. ஹேட்மயர் அபார ஆட்டம்

மும்பை: ஐபிஎல் தொடரின் 20வது லீக் ஆட்டததில் ராஜஸ்தான் அணி, லக்னோ அணி பலப்பரீட்சை நடத்தியது. மும்பை வான்கடே மைதானத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீசியது.

இதனையடுத்து ராஜஸ்தான் அணி ஜெய்ஷவாலுக்கு பதிலாக வெண்டர் டுசனை அணியில் சேர்த்தது. இதனால் பட்லருக்கு ஜோடியாக தேவுடட் படிக்கல் தொடக்க வீரராக களமிறங்கினார்.

ஆனால் ராஜஸ்தான் அணி எடுத்த முடிவு பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை.

ராஜஸ்தான் பிளான்

ராஜஸ்தான் பிளான்

அதிரடியாக விளையாட முற்பட்ட பட்லர் 1 பவுண்டரி, 1 சிக்சர் விளாசி 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தேவுடட் படிக்கல் பொறுப்பாக விளையாடினாலும் அவரால் வேகமாக ரன் குவிக்க முடியாமல் கொஞ்சம் திணறினார். 29 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.கேப்டன் சஞ்சு சாம்சன் 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

வெண்டர் டுசைன் 4 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டை ராஜஸ்தான் இழக்க 67 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்து தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த ஷிம்ரன் ஹேட்மயர், அபாரமாக விளையாடி ரன் குவித்தார். அஸ்வின் பொறுமையாக விளையாடி நல்ல கம்பெனி கொடுத்தார்.

அஸ்வின் ரிட்டயர்ட்

அஸ்வின் ரிட்டயர்ட்

ஹேட்மயர் 36 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர்களும், ஒரு பவுண்டரி மட்டும் அடங்கும். திடீரென்று அஸ்வின் 28 ரன்கள் ஆகும் போது ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். அஸ்வின் ரன்கள் குவிக்கும் வேகம் குறைவாக இருந்ததால், அவரை மாற்றிவிட்டு இளம் வீரர் ரியான் பராக்கை களத்துக்கு ராஜஸ்தான் அணி அனுப்பியது.

166 ரன்கள் இலக்கு

166 ரன்கள் இலக்கு

எனினும் ரியான் பராக் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார், இதனால் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது, ராஜஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஹோல்டர், கிருஷ்ணப்பா கௌதம் தலா 2 விக்கெட்கைளை வீழ்த்தினர்.

Story first published: Monday, April 11, 2022, 0:07 [IST]
Other articles published on Apr 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+