Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?

கொல்கத்தா: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஹாசல்வுட் நிகழ்த்திய மேஜிக்கால் ஆர்சிபி அணி கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது.

Recommended Video

IPL 2022 Royal Challengers Bangalore மிரட்டல் ஆட்டம்! ஆடிப்போன LSG | #Cricket

இரு அணிகளும் மோதிய எலிமினேட்டர் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஓப்பனிங்கே அதிர்ச்சி

ஓப்பனிங்கே அதிர்ச்சி

இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஓப்பனிங்கே காத்திருந்தது. கேப்டன் டூப்ளசிஸ் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதன் பின்னர் வந்த நட்சத்திர வீரர்களான க்ளென் மேக்ஸ்வெல் 9 ரன்களுக்கும், மஹிபால் லாம்ரோர் 14 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். அணியின் தூணாக பார்க்கப்பட்ட விராட் கோலியும் 25 ரன்களுக்கு நடையை கட்டினார்.

ஷாக் கொடுத்த பட்டிதார்

ஷாக் கொடுத்த பட்டிதார்

இனி தினேஷ் கார்த்திக் தான் காப்பாற்ற வேண்டும் என்ற சூழல் வந்த போது இளம் வீரர் ரஜத் பட்டிதார் ஆச்சரியம் தந்தார். விக்கெட்கள் சென்றாலும் மறுமுணையில் தூண் போன்று நிலைத்த அவர், 49 பந்துகளில் சதமடித்து லக்னோவுக்கு தலைவலியை ஏற்படுத்தினார். தினேஷ் கார்த்திக் அவருக்கு உறுதுணையாக நின்றார்.

ரஜத் பட்டிதாரின் சதம்

ரஜத் பட்டிதாரின் சதம்

கடைசி வரை நிலைத்த பட்டிதார் 54 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 112 ரன்களை அடித்தார். தினேஷ் கார்த்திக் தனது பங்கிற்கு 23 பந்துகளில் 37 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்களை சேர்த்தது.

லக்னோ அணி

லக்னோ அணி

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியிலும் ஓப்பனிங் சொதப்பியது. டூப்ளசிஸின் அட்டகாசமான கேட்ச்சால் குயிண்டன் டிகாக் 6 ரன்களுக்கு வெளியேறினார். மன்னன் வோரா 19 ரன்களுக்கு வெளியேறினார். 41 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தவித்த லக்னோ அணியை கேப்டன் கே.எல்.ராகுல் - தீபக் ஹூட தூக்கி நிறுத்தினர்.

மிரட்டிய கே.எல்.ராகுல்

மிரட்டிய கே.எல்.ராகுல்

அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் 58 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும்

5 சிக்ஸர்களுடன் 79 ரன்களை சேர்த்தார். தீபக் ஹூடா 26 பந்துகளில் 45 ரன்களை விளாசினார். ஒவ்வொரு ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்கள் பறந்ததால் லக்னோ அணி வெற்றி பெற கடைசி 12 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது

19வது ஓவர் ட்விஸ்ட்

19வது ஓவர் ட்விஸ்ட்

ஆனால் 19வது ஓவரில் தான் ட்விஸ்ட் நடந்தது. ஹாசல்வுட் வீசிய இந்த ஓவரில் கேப்டன் கே.எல்.ராகுல் விக்கெட்டை பறிகொடுத்தார். ரன் குவிக்க வந்த க்ருணால் பாண்ட்யா முதல் பந்திலேயே அவுட்டாகி சென்றார். இதனால் ஆட்டம் முற்றிலுமாக ஆர்சிபி பக்கம் திரும்பியது. ரன் அடிக்க யாரும் இல்லாததால் 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்களை இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வென்றது.

குவாலிஃபையர் 2 சுற்றுக்கும் முன்னேறியது.

Story first published: Thursday, May 26, 2022, 0:32 [IST]
Other articles published on May 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+