
சிஎஸ்கே அணி நெருக்கடி
கேப்டன்சி மாற்றம், தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வி என சென்னை அணி மீது ரசிகர்கள் வைத்திருந்த நம்பிக்கை குறைந்துள்ளது. குரூப் வடிவத்தில் போட்டி நடைபெறுவதால், இனி வெற்றி பாதைக்கு திரும்பினால் தான் ப்ளே ஆஃப் வாய்ப்புகள் சிறிதளவாவது இருக்கும். இதற்காக தான் தீபக் சஹாரை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

தொடரில் இருந்து விலகலா?
காயத்தால் பெங்களூரு NCA வில் பயிற்சியில் ஈடுபட்ட தீபக் சஹாருக்கு தற்போது முதுகில் மற்றொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது சரியாக சிறிது காலம் எடுக்கும் என்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சஹார் விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே சஹாரை நம்பக்கூடாது என தனது கடைசி ஆயுதத்தை தோனி கையில் எடுத்துள்ளார்.

அப்படி என்ன ஸ்பெஷல்
அதாவது கடைசி கட்ட போட்டிகளுக்காக சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருந்த U 19 வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை தோனி களமிறக்கவுள்ளார். அதுவும் ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியிலேயே பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் சஹாரின் இடத்தை பூர்த்தி செய்வதற்கான அத்தனை தகுதிகளும் ராஜ்வர்தனிடம் உள்ளது. U19 உலகக்கோப்பையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தோனியும் அதில் மிரண்டு தான் ஆர்வம் காட்டியுள்ளார்.

யாருடைய இடம் பறிபோகிறது
சிஎஸ்கேவில் ஏற்கனவே துஷார் தேஸ்பாண்டே மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகியோர் பயன்படுத்தப்பட்டனர். இதில் துஷாரை நீக்கிவிட்டனர். எனவே இன்று ஷிவம் தூபே, முகேஷ் சௌத்ரி, டுவைன் பிராவோ என இவர்கள் மூவரில் யாரேனும் ஒருவரின் இடத்திற்கு ராஜ்வர்தன் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











