Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி எடுத்த ஸ்பெஷல் வகுப்பு... உண்மையை கூறிய ஹங்கர்கேகர்.. சிஎஸ்கே பயிற்சி முகாமில் சுவாரஸ்யம்!

சூரத்: சிஎஸ்கே கேப்டன் தோனி தனக்கு மட்டும் வழங்கிய ஸ்பெஷல் பயிற்சி குறித்து ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி முதல் மும்பையில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டும் முதல் அணியாக தனது பயிற்சியை தொடங்கின.

சிஎஸ்கே பயிற்சி முகாம்

சிஎஸ்கே பயிற்சி முகாம்

சூரத் நகரில் உள்ள லால்பாய் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்களுக்கு பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தாண்டு போட்டிகள் முழுவது மும்பை, புனே நகரங்களில் நடைபெறுவதால், அங்குள்ள களத்தை போன்றே இருக்கும் சூரத் மைதானத்தை தேர்வு செய்திருந்தார் தோனி.

சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

பயிற்சி முகாமின் போது, தனிப்பட்ட வகுப்புகள், இண்ட்ரா ஸ்குவாட் போட்டிகள் என பல விஷயங்கள் நடைபெற்றன. குறிப்பாக இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு மட்டும் கேப்டன் தோனி ஸ்பெஷல் பயிற்சி வழங்கி வந்தார், வலைப்பயிற்சியில் அருகில் இருந்து அட்வைஸ் கூறி வந்தார்.

ராஜ்வர்தன் பேச்சு

ராஜ்வர்தன் பேச்சு

இந்நிலையில் தோனி என்ன சொல்லிக்கொடுத்தார் என ஹங்கர்கேகர் பகிர்ந்துள்ளார். பயிற்சியின் முதல் நாளிலேயே தோனி பையா, என்னிடம் நீங்கள் தற்போது வரை என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்களோ, அதையே செய்யுங்கள். எதையும் மாற்றாதீர்கள். சுதந்திரமாக என்ன வேண்டுமோ அதை முயற்சி செய்து பாருங்கள், யாரும் தடை போட மாட்டார்கள் என என்னிடம் உறுதியளித்தார்.

தோனியின் பேச்சு

தோனியின் பேச்சு

தோனியுடன் சேர்ந்து நாங்கள் கால்பந்து விளையாடி மகிழ்ந்தோம். அவர் மிகவும் நண்பரை போன்று எங்களுடன் பேசி மகிழ்ந்தார். இதுகுறித்து பேசிய கேப்டன் தோனி, கடந்த 15 - 20 நாட்களாக ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள நல்ல முயற்சியாக இருந்தது. சூரத்தில் எங்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக இருந்தது,. நல்ல நாட்கள் இது எனக்கூறினார்.

Story first published: Thursday, March 17, 2022, 19:30 [IST]
Other articles published on Mar 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+