Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட நீங்களா..மும்பை போட்டியில் குழந்தையாக மாறிய ரன்வீர் சிங்..வெற்றிக்கு பிறகு செய்த விஷயம் - வீடியோ

மும்பை அணியின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் செய்த விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் நேற்று குஜராத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 177/6 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய குஜராத் அணி 172/5 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

மும்பை அணி வெற்றி

மும்பை அணி வெற்றி

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஓப்பனிங் வீரர்கள் இஷான் கிஷான் 45 ரன்கள், ரோகித் சர்மா 43 ரன்களும் சேர்த்தனர். இதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் (13), பொல்லார்ட் (4) சொதப்ப, கடைசி நேரத்தில் டிம் டேவிட் மட்டும் 21 பந்துகளில் 44 ரன்களை குவித்து அணிக்கு நல்ல ஸ்கோரை பெற்றுக்கொடுத்தார்.

குஜராத் இன்னிங்ஸ்

குஜராத் இன்னிங்ஸ்

173 என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியில் சாஹா (55), சுப்மன் கில் (52) நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இதன்பின்னர் வந்தவர்கள் அனைவருமே சொதப்பி விட்டனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (24), சாய் சுதர்சன் (14), ராகுல் தேவட்டியா (3) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் கடைசி ஓவரில் அந்த அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவர் த்ரில்

கடைசி ஓவர் த்ரில்

ஆச்சரியம் தரும் வகையில் ரோகித் சர்மா பந்தை டேனியல் சாம்ஸுக்கு கொடுத்தார். நடப்பு தொடரில் மும்பை அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவர் டேனியல் தான். இவரின் ஓவரில் அதிக ரன்கள் கசியும். ஆனால் நேற்று அதனை மாற்றி அமைத்தார். கடைசி ஓவரில் 1, 0, W, 1, 0, 0 என அபாரமாக பந்துவீசி அசத்தினார்.

ரன்வீர் சிங் வருகை

ரன்வீர் சிங் வருகை

இந்நிலையில் மும்பை வெற்றியின் போது ஒரே ஒரு விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதாவது பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் நேற்று போட்டியை காண வந்திருந்தார். தனி அறை, விஐபி சீட் போன்று எதுவும் இல்லாமல், பார்வையாளர்களுடன் சகஜமாக நின்றிருந்த அவர், உற்சாகமாக போட்டியை கண்டுகளித்தார்.

பரவும் வீடியோ

தீவிர மும்பை ரசிகரான ரன்வீர், வெற்றிக்கு பிறகு ஒரு குழந்தையை போன்று துள்ளி குதித்து ஆரவாரம் செய்து கொண்டாடினார். அப்போது இவ்வளவு தீவிர ரசிகரா என சக ரசிகர்கள் வியப்பில் பார்த்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Saturday, May 7, 2022, 18:07 [IST]
Other articles published on May 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+