Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி பந்தில் திக்.. திக்.. ரசிகர்களுக்கு பீதியை ஏற்படுத்திய ரஷித் கான்.. குஜராத் அணி வென்றது எப்படி

மும்பை: கடைசி பந்தில் ரஷித் கான் காட்டிய அதிரடியால் ஐதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

Recommended Video

SRH vs GT போட்டியில் Gujarat Titans-ஐ மிரள விட்ட Umran Malik

40வது லீக் போட்டியாக நடைபெற்ற இந்த மோதல் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணி டாஸில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை.

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

டாஸ் மட்டுமல்லாது ஓப்பனிங்கிலும் வில்லியம்சன் சொதப்பினார். ஷமி வீசிய பந்தில் 5 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றினார். இதன் பின்னர் வந்த ராகுல் திரிபாதி 16 ரன்கள், நிகோலஸ் பூரண் 3, வாஷிங்டன் சுந்தர் 3 என வெளியேறினர். பொறுப்புடன் விளையாடிய அபிஷேக் சர்மா - ஏய்டன் மர்க்ரம் ஜோடி ஐதராபாத் அணியை காப்பாற்றியது. அபிஷேக் 65 ரன்களும், மர்க்ரம் 56 ரன்களும் வீச 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 195 /6 ரன்களை குவித்தது.

சிறப்பான ஓப்பனிங்

சிறப்பான ஓப்பனிங்

கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. பவர் ப்ளேவில் சாஹா - சுப்மன் கில் அதிரடி காட்ட முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் சேர்ந்தது. எனினும் அதற்கு தடையை போட்டார் உம்ரான் மாலிக். அவர் வீசிய ஓவர்களில் சுப்மன் கில் 22 ரன்களுக்கும் ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களுக்கும் வெளியேறினர்.

சரிந்த மிடில் ஆர்டர்

சரிந்த மிடில் ஆர்டர்

தூண் போன்று நின்று ஆடி வந்த விருதிமான் சாஹாவும் உம்ரான் மாலிக்கிடம் சிக்கினார். அவர் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் சாஹா 68 ரன்கள், டேவிட் மில்லர் 17 ரன்கள், அபினவ் மனோகர் டக் அவுட் என குஜராத் அணி நிலை தடுமாறி போனது. மறுமுணையில் ராகுல் திரிபாதி மட்டுமே சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினார்.

2 ஓவர்களில் 35 ரன்கள்

2 ஓவர்களில் 35 ரன்கள்

இதனால் கடைசி 2 ஓவரில் குஜராத் அணிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ராகுல் தேவட்டியா மற்றும் ரஷித் கான் இருந்தனர். நடராஜன் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸர் உட்பட 12 ரன்கள் பறந்தன. எனினும் கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்பதால் மீண்டும் பரபரப்பு கட்டத்திற்கு ஆட்டம் சென்றது.

 கடைசி ஓவர் பரபரப்பு

கடைசி ஓவர் பரபரப்பு

முதல் பந்தை எதிர்கொண்ட ராகுல் தேவட்டியா சிக்ஸர் அடித்து நம்பிக்கை தந்தார். 2வது பந்தில் சிங்கிள் மட்டுமே அடிக்க முடிந்ததால் ரஷித் கான் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். அப்போது 4 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. எனினும் ரஷித் கான் ஏமாற்றவில்லை. ஓவரின் 3வது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். இதன் பின்னர் 4வது பந்து டாட் பாலாக மாற, கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்களை அடித்து அபார வெற்றியை பெற்றுக்கொடுத்தார். ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் தேவட்டியா 21 பந்துகளில் 40 ரன்களையும், ரஷித் கான் 11 பந்துகளில் 31 ரன்களை விளாசினர். இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு சென்றது.

Story first published: Wednesday, April 27, 2022, 23:54 [IST]
Other articles published on Apr 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+