Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“தோனி அன்று செஞ்ச தப்பு.. இன்று வினையாகியுள்ளது”.. சிஎஸ்கே திணறுவதற்கான காரணம்.. ரவிசாஸ்திரி பளீச்!

மும்பை: சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு தோனி மட்டும் தான் முக்கிய காரணம் என முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் தொடர் வெற்றிகளை பெற்று சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி, இந்த சீசனில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து ஐபிஎல் வரலாற்றில் தனது மோசமான சாதனையை படைத்துள்ளது.

பிரச்சினைகள் என்ன

பிரச்சினைகள் என்ன

சென்னை அணியின் இந்த தோல்விக்கு சரியான வீரர்கள் அமையாதது தான் முக்கிய காரணமாக கூறப்பட்டு வந்தது. ஏனென்றால் முதல் போட்டியில் மொயீன் அலி இல்லை, அதன் பின்னர் ருதுராஜ் கெயிக்வாட் ஃபார்ம் அவுட், தீபக் சஹார் இல்லை என அடுக்கடுக்கான ப்ளேயிங் 11 குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.

ரவிசாஸ்திரி குற்றச்சாட்டு

ரவிசாஸ்திரி குற்றச்சாட்டு

இந்நிலையில் ப்ளேயிங் 11ல் எல்லாம் நன்றாக உள்ளது, தோனி தான் முக்கிய காரணம் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த தோனி 40 வயதை எட்டியதால் பதவி விலகியது சரிதான். ஆனால் அந்த பதவியை எப்போது யாரிடம் தர வேண்டும் என யோசிக்காமல் போய்விட்டார். ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார்.

 என்ன காரணம்

என்ன காரணம்

ஜடேஜாவை போன்ற வீரர், களத்தில் நன்கு கவனம் செலுத்தி ஆட்டத்தை மாற்றி அமைக்கக்கூடியவர். ஆனால் தற்போது கேப்டன்சியால் ஏற்பட்ட அழுத்தம், அணியை மட்டுமல்லாது ஜடேஜாவின் ஆட்டத்தையும் பாதித்துவிட்டது. கடந்த சீசனில் பேட்டிங்கில் ஃபினிஷர் அவதாரம் எடுத்த அவர், இந்த முறை பேட்டிங் செய்ய திணறுகிறார்.

அடுத்த கேப்டன்?

அடுத்த கேப்டன்?

தோனி பதவி விலகுவதாக இருந்திருந்தால், ஃபாப் டூப்ளசிஸை விட்டிருக்க கூடாது. அவரை அணியில் வைத்துக்கொண்டு கேப்டனாக நியமித்திருக்க வேண்டும். அல்லது அதுபோன்ற வீரரை ஏலத்திலாவது வாங்கியிருக்க வேண்டும். கைக்கு அருகில் இருந்த வாய்ப்பை விட்டுவிட்டு ஜடேஜாவை கேப்டனாக்கி தோனி தவறு செய்துவிட்டர் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

Story first published: Monday, April 11, 2022, 17:20 [IST]
Other articles published on Apr 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+