
ஹர்திக் கம்பேக்
நேற்றைய போட்டியில் குஜராத் அணி 72 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது களத்திற்கு வந்த ஹர்திக் பாண்ட்யா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸர் என தனக்கே உரிய அதிரடியை காட்டிவிட்டு சென்றார். இதே போல பவுலிங்கிலும் முழுமையாக 4 ஓவர்களை வீசினார்.

பந்துவீச்சில் ஆச்சரியம்
ஹர்திக் பாண்ட்யா 37 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை தான். ஆனால் 145 கிமீ வேகத்தில் அவர் பந்துவீசியதை பார்த்த இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் சக வீரர்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர். இதனால் இந்திய அணியில் அவருக்கான இடம் உறுதியாகிவிடும் எனக் கூறப்படுகிறது.

ரவி சாஸ்திரி புகழாரம்
இந்நிலையில் அதுகுறித்து ரவி சாஸ்திரி பேசியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் எனத்தெரிகிறது. அடுத்த 4 மாதங்களில் உலகக்கோப்பை வருவது அவருக்கு தெரியும். அதனால் தான் கடும் உடற்பயிற்சி மூலம் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அவர் இரண்டு வீரர்களுக்கு சமமான ஒருவர் ஆகும். அவர் மட்டும் தயாராகிவிட்டால் இந்திய அணிக்கு நற்செய்தி தான் எனக்கூறுவேன்.

பயமே தேவையில்லை
ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கவலையே வேண்டாம். ஏனென்றால் மற்ற வீரர்கள் தான் தங்களது இடம் போகிறதோ என பயத்தில் இருக்க வேண்டும். தரமான பேட்ஸ்மேன், அட்டகாசமான ஃபீல்டர், காலம் அறிந்து செயல்படும் பவுலர் என முழு தொகுப்பாக ஹர்திக் வருகை தரவுள்ளார் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications