Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்த தங்கத்தை நம்பலையே”.. டெல்லியை அலறவிட்ட அஸ்வின்.. பவுலிங்கில் அல்ல பேட்டிங்கில்!

மும்பை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக அஸ்வின் ஆடிய பேட்டிங் ரசிகர்களை வாயைப்பிளக்க செய்துள்ளது.

Recommended Video

IPL 2022 Rajasthan Royals-ஐ ஓடவிட்ட Delhi Capitals அபார வெற்றி | Oneindia Tamil

ஐபிஎல் தொடரின் 58வது லீக் போட்டியில் இரு அணிகளும் ப்ளே ஆஃப் வாய்ப்புக்காக மோதின.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பட்லர் ஏமாற்றம்

பட்லர் ஏமாற்றம்

இதனையடுத்து களமிறங்கிய தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. நம்பிக்கை நாயகனாக இருந்த ஜாஸ் பட்லர் வெறும் 7 ரன்களுக்கு வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 19 ரன்களுக்கு மிட்செல் மார்ஷிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். ராஜஸ்தான் அணி 2 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3வது வீரராக களமிறங்கினார்.

அரைசதம் விளாசல்

அரைசதம் விளாசல்

சிறிது நேரம் நின்றுவிட்டு அவுட்டாவார் என டெல்லி பவுலர்களே நம்பினர். ஆனால் அனைவருக்குமே தலைவலி தான் மிஞ்சியது. இன் ஃபார்ம் பேட்ஸ்மேன் போன்று க்ளாசிக் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை விளாசினார். 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 38 பந்துகளில் அஸ்வின் அரைசதம் அடித்தது ரசிகர்களுக்கு வியப்பாக இருந்தது. அஸ்வினுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய தேவ்தத் பட்டிக்கல் 48 ரன்களை அடித்தார்.

15 ஆண்டு காத்திருப்பு

15 ஆண்டு காத்திருப்பு

எப்போதுமே லோயர் ஆர்டரில் களமிறங்கி வந்த அஸ்வின் டி20 கிரிக்கெட்டில் அடிக்கும் முதல் அரைசதம் இதுவே ஆகும். இதுவரை 277 டி20 போட்டிகளில் ஆடியுள்ள அஸ்வின் 15 ஆண்டுகளுக்கு பின் இதனை சாதித்துள்ளார்.

இந்த அரைசதத்துடன் சேர்த்து நடப்பு தொடரில் அவர் 7 இன்னிங்ஸ்களில் 123 ரன்களை விளாசியுள்ளார்.

 பிசிசிஐ-க்கு பதில்

பிசிசிஐ-க்கு பதில்

ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் எடுத்தால், பேட்டிங்கிற்கு உதவமாட்டார் என பல சர்வதேச போட்டிகளில் ஜடேஜாவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இனி பேட்டிங்கிலும் நான் ராஜா தான் என்பது போல அஸ்வின் நிரூபித்துக்காட்டியுள்ளார்.

Story first published: Wednesday, May 11, 2022, 22:09 [IST]
Other articles published on May 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+