Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜாவுக்கு இது தான் கடைசி சீசன்.. சிஎஸ்கேவிலிருந்து வெளியேற போகும் ஜடேஜா? ரெய்னா மாதிரி ஆயிடுச்சி

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஜடேஜா, அடுத்த ஆண்டு அணியிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன்ஷியில் ஏற்பட்ட அவமானம் மற்றும் ஏமாற்றத்தால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஜடேஜா கேப்டன் பதவிக்கு வந்ததற்கும், அவர் கேப்டன் பதவியை விட்டு சென்றதற்கும் பல காரணங்கள் கூறப்படுகிறது.

ஜடேஜாவின் ஆசை

ஜடேஜாவின் ஆசை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ஜடேஜா, சௌராஷ்டிராவை சேர்ந்தவர். ஐபிஎல் தொடரில் குஜராத் அணி களமிறங்குகிறது என்ற செய்தி வெளியான உடன், ஜடேஜா அந்த அணிக்கு சென்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து சிஎஸ்கே நிர்வாகத்திடம் ஜடேஜா தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

சமாளித்த சிஎஸ்கே

சமாளித்த சிஎஸ்கே

ஆனால், ஜடேஜாவை விட நினைக்காத சிஎஸ்கே, அவரை அணியிலேயே நீடிக்க வைக்க பல முயற்சிகளை செய்தது. குஜராத் அணிக்கு கேப்டனாக செல்வதால், இங்கு நீடிக்க விரும்பவில்லை என்று அவர் கூறிய உடன், தோனியே தனது பதவியை ராஜினாமா செய்து, அவருக்கு வழங்கினார் மேலும் அவருக்கு ஊதியத்தையும் அதிகரிக்க சொன்னார்.

ஜடேஜாவுக்கு அவமானம்

ஜடேஜாவுக்கு அவமானம்

இதனால் கேப்டனாக மாறிவிட்டோம் என்று ஜடேஜா நினைத்தாலும், அவரை ஒரு பொம்மை கேப்டன் போலவே தோனி வைத்திருந்தார். அணி தேர்வு முதல் ஃபில்டர்களை நிறுத்துவது வரை எல்லாமே தோனி தான் செய்தார். ஆனால் அணி தோல்வி அடைந்தால் அதன் பழி அனைத்தும் ஜடேஜா மீது வீழ்ந்தது. கேப்டனாக சுதந்திரமாக செயல்பட முடியாததால் விரக்தி அடைந்த ஜடேஜா , தற்போது அவராகவே கேப்டன் பதவியை விட்டு செல்கிறேன் என்று கூறிவிட்டார்.

Recommended Video

தொடர் தோல்விகளால் ஏற்பட்ட அழுத்தம்.. Dhoni மீண்டும் CSK Captain ஆக பதவியேற்றது ஏன்?
விரக்தியில் முடிவு

விரக்தியில் முடிவு

சிஎஸ்கே தொடர் தோல்வி மூலம் ஜடேஜா, கேப்டன் பதவியை ஏற்கும் தகுதியான நபர் இல்லை என்று ஒரு இமேஜ் உருவாகிவிட்டது. இதனால் ஜடேஜா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார். சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டோம் என்று நினைக்கும் ஜடேஜா, அணியிலிருந்து அடுத்த ஆண்டு விலகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெய்னாவுக்கும், சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட விரிசல் போல் தற்போது ஜடேஜாவுக்கும் வந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

Story first published: Sunday, May 1, 2022, 20:20 [IST]
Other articles published on May 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+