
கோப்பைகான ஏக்கம்
இதுவரை நடந்த அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பங்கேற்றுள்ள ஆர்சிபி அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. இதனால் ரசிகர்கள் முதல் அணி நிர்வாகத்தினர் வர அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கு பொறுப்பேற்றுக்கொண்ட விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். எனினும் அந்த அணிக்காக தொடர்ந்து பேட்ஸ்மேனாக செயல்படுவேன் என உறுதியளித்துள்ளார்.

ஆர்சியில் குழப்பம்
அடுத்தாண்டு 2 புதிய அணிகள் ஐபிஎல் தொடரில் மெகா ஏலம் மட்டுமல்லாமல் 2 புதிய அணிகளும் சேர்க்கப்படவுள்ளன. இதனால் வீரர்கள் மற்றும் அணி ஊழியர்களை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவவுள்ளது. இந்நிலையில் தற்போதே அதற்கான நடவடிக்கையில் குதித்துள்ளது ஆர்சிபி அணி. அதாவது அணிக்கு சிறந்த தலைமைபயிற்சியாளர் ஒருவரை புதிதாக நியமித்துள்ளது.

புதிய பயிற்சியாளர்
2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதி வரை சிமான் கடிச் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். அமீரகத்தில் நடந்த 2ம் பாதியின் போது இவர் பதவி விலகியதால், இதனால் அணியின் இயக்குநர் மைக் ஹெஸன் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஆர்சிபியின் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரை புதிய கோச்சாக நியமித்துள்ளது.

சிறப்பான கோச்
கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டவர் சஞ்சய் பங்கர். மேலும் 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆர்சிபி அணியின் புதிய கேப்டனும் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











