Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பச்சை சட்டையில் அடித்த லக்.. 4 பேர் டக் அவுட்.. ஐதராபாத்தை அடித்து நொறுக்கிய ஆர்சிபி..ரன்ரேட் அமோகம்

மும்பை: ஐபிஎல் தொடரில் பச்சை நிற ஜெர்சியை அணிந்து 6 ஆண்டுக்கு பிறகு பெங்களூரு அணி வெற்றியை பெற்றது.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டுபிளஸிஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

ஆட்டத்தின் முதல் பந்திலேயே கோலி டக் அவுட்டாகி வெளியேற, ஆர்சிபி அணியின் தொடக்கம் அதிர்ச்சிக்கரமாக அமைந்தது.

105 ரன்கள் ஜோடி

105 ரன்கள் ஜோடி

இதனையடுத்து டுபிளஸிஸ், ரஜத் பட்டிடார் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர்.சிறப்பாக விளையாடிய டுபிளஸிஸ் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆர்சிபி அணி 11.4வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. பட்டிடார் 38 பந்துகளில் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது.

கார்த்திக் சரவெடி

கார்த்திக் சரவெடி

இதன் பின்னர் களத்துக்கு வந்த மெக்ஸ்வேல் 24 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரி, 2 சிக்சர் அடித்திருந்தார். இறுதியில் களத்துக்கு வந்த தினேஷ் கார்த்திக்,தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரி என 8 பந்துகளில் அவர் 30 ரன்களை குவிக்க, இறுதி ஓவரில் மட்டும் 25 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் டுபிளஸிஸ் 53 பந்துகளில் 70 ரன்களை அடித்து ஆன்கர் ரோலை சிறப்பாக செய்தார்.

அதிர்ச்சி தொடக்கம்

அதிர்ச்சி தொடக்கம்

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு ஆரம்பமே பூதாகரமாக அமைந்தது. முதல் பந்திலேயே வில்லியம்சன் ரன் அவுட்டாக, அதே ஓவரில் 5வது பந்தில் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இதனையடுத்து களத்துக்கு வந்த ராகுல் திரிபாதி, ஏய்டன் மார்க்கரம் ஆகியோர் நிதானமாக விளையாடினர். மார்க்ரம் 27 பந்துகளில் 21 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.

4 டக் அவுட்

4 டக் அவுட்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பூரான் 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து வெளியேற, தனியாக நின்று போராடிய ராகுல் திரிபாதி 37 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் களமிறங்கிய 6 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஐதராபாத் இன்னிங்சில் 4 பேர் மொத்தம் டக் அவுட்டாக, 19.2வது ஓவரில் 125 ரன்களுக்கு ஐதராபாத் அணி சுருண்டது. இதன் மூலம் ஆர்சிபியின் ரன் ரேட் விகிதம் அதிகரித்தது.

Story first published: Sunday, May 8, 2022, 19:56 [IST]
Other articles published on May 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+