Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்னால முடியல.. விட்டுவிடுங்க” புலம்பித்தள்ளிய டூப்ளசிஸ்.. ஆர்சிபியின் தோல்வியால் விரக்தி பேச்சு!

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வி அடைந்தது குறித்து ஆர்சிபி கேப்டன் டூப்ளசிஸ் புலம்பியுள்ளார்.

இரு அணிகளும் மோதிய போட்டி நேற்று மும்பை DY பாட்டில் மைதானத்தில் சிக்ஸர் மழையுடன் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களை குவித்தது.

மிக மோசமான தோல்வி

மிக மோசமான தோல்வி

கேப்டன் டூப்ளசிஸ் (88), விராட் கோலி (41), தினேஷ் கார்த்திக் (32) என அடுத்தடுத்து அதிரடி காட்டியதால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி குறைந்த ஸ்கோருக்குள் சுருண்டுவிடும் என எதிர்பார்த்த நிலையில் 19 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து ஆச்சரியம் தந்தனர். வழக்கம் போல ஆர்சிபியின் பவுலிங் மிக மோசமாக அமைந்தது.

கேப்டனின் விளக்கம்

கேப்டனின் விளக்கம்

தோல்வி குறித்து பேசிய டூப்ளசிஸ், இந்த போட்டியில் பேட்டிங் மிகவும் அருமையாக இருந்தது. சிறு வித்தியாசத்தில் வெற்றி பறிபோயுள்ளது. தொடக்கத்திலும், மிடில் ஓவர்களிலும் ஓரளவிற்கு பவுலிங் நன்றாக வீசினோம். ஆனால் அதன்பின் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பவுலர்களுக்கு கடினமானது. கேட்ச்கள் தான் ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும் அப்படி பார்க்கையில் அதில் ஆர்சிபி சொதப்பினோம்.

புலம்பிய டூப்ளசிஸ்

புலம்பிய டூப்ளசிஸ்

என்னால் முடியவில்லை, மிகவும் சோர்ந்துவிட்டேன். ஒவ்வொரு பந்தையும் தடுக்க டைவ் அடித்து டைவ் அடித்து கை மூட்டுப்பகுதி ஓய்ந்துவிட்டன. சற்று கவலையாக தான் இருக்கிறது. ஒடியன் ஸ்மித் எப்படி பேட்டிங் செய்வார் என்பது அனைவருக்கும் தெரியும். தொடக்கத்திலேயே அவர் கேட்ச் கொடுத்தார். ஆனால் அதனை தவறவிட்டது தான் பெரிய தவறு என கூறினார்.

3 முக்கிய தவறுகள்

3 முக்கிய தவறுகள்

ஆர்சிபி அணி நேற்றைய போட்டியில் மட்டும் 21 வைட் பந்துகளை வாரி வழங்கியது. அதன்பின்னர் ஒடியன் ஸ்மித் வழங்கிய கேட்ச், ரன் அவுட் வாய்ப்பு என முக்கிய தருணங்கள் அனைத்திலும் சொதப்பியது. இந்த முன்று காரணங்களே ஆர்சிபி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Story first published: Monday, March 28, 2022, 18:53 [IST]
Other articles published on Mar 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+