விராட் கோலியால் வந்த பிரச்சினை.. ப்ளேயிங் 11 சமநிலை இன்றி தவிக்கும் ஆர்சிபி.. குழப்பத்தில் டூப்ளசிஸ்
மும்பை: ஆர்சிபி அணி தற்போது தான் புத்துணர்ச்சி பெற்றுள்ளது என ரசிகர்கள் நிம்மதியடைந்த சூழலில் புதிய குழப்பம் உண்டாகியுள்ளது.
15வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 7 நாட்கள் தான் உள்ளன. இந்தாண்டு அதிக கவனம் ஈர்த்துள்ளது ஆர்சிபி தான் எனக்கூறலாம்.
இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாத அந்த அணி, இந்தாண்டு கேப்டன், ப்ளேயிங் 11 என பல மாற்றங்களுடன் களமிறங்குகிறது.

ஆர்சிபி அணி திட்டம்
புதிய கேப்டனாக டூப்ளசிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கோலி இனி சுதந்திரமாக விளையாடுவார் என்றும், அவரின் ரன் வேட்டை, பழைய கோலியை நியாபகப்படுத்தும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதற்கேற்றார் போல தான் கோலியும் தயாராகி வருகிறார். ஆனால் அவர் இந்தாண்டு எந்த வரிசையில் களமிறங்குவார் என்பதில் தான் குழப்பம் நீடித்து வருகிறது.

மீண்டும் ஓப்பனிங்
கடந்த 3 சீசன்களை வைத்து பார்க்கும் போது பவர் ப்ளே ஓவர்களில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 130.16 ஆக உள்ளது. இதுவே மிடில் ஓவர்களை எடுத்துக்கொண்டால் 110 தான் சராசரியாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, விராட் கோலி ஸ்பின்னர்களை எதிர்கொள்ள சிரமப்படுகிறார். ஸ்பின்னர்களிடம் விக்கெட் ஆகவில்லை என்றாலும், அவரின் ஸ்டரைக் ரேட் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் ஸ்பின்னர்கள் வருவதற்குள், கோலி நல்ல ஃபார்முக்கு வந்திருக்க வேண்டும். இதற்கு இந்த முறையும் விராட் கோலி ஓப்பனிங் களமிறங்க வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வெற்றி வாய்ப்பு உடையும்
கடந்த சீசனில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக இருந்தது, டூப்ளசிஸுடன் இளம் வீரர் ருதுராஜ் ஓப்பனிங் ஆடியது தான். எனவே அனுபவம் வாய்ந்த டூப்ளசிஸுடன் இளம் வீரர் அனுஜ் ராவத் களமிறங்கினால் முதல் விக்கெட்டிற்கு கோலி இருப்பார். அவருக்கு பின்பு, மேக்ஸ்வெல், மஹிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக் என மிடில் ஆர்டர் மிக பலமாக அமையும்.

நீடிக்கும் குழப்பம்
ஒரு புறம் மிடில் ஓவர்களில் விராட் கோலி ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், மற்றொரு புறம் ஓப்பனிங் களமிறங்கினால், ப்ளேயிங் 11ல் சமநிலையில் இல்லாமல் போய்விடும். இதனால் ஆர்சிபி நிர்வாகம் கோலியிடன் பேட்டிங் வரிசை குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய சூழலில் உள்ளது. ரசிகர்களுக்கும் இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications