Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிர்ச்சி அளித்த விராட் கோலி.. சதத்தை தவறவிட்ட டுபிளஸிஸ்.. 7-2 என இருந்த ஸ்கோர் என்ன ஆச்சு தெரியுமா?

மும்பை: ஐபிஎல் தொடரின் 31வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், லக்னோ அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கேஎல் ராகுல் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இரு அணிகளும் பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்கள் பேட்டிங் செய்ய வந்தனர்.

பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற நினைத்த ஆர்சிபி வீரர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

கோல்டன் டக்

கோல்டன் டக்

ஆர்சிபி வீரர் அனுஜ் ராவத் 4 ரன்கள் எடுத்திருந்த போது ஷமிரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய விராட் கோலி முதல் பந்திலேயே சமிரா ஓவரில் கோல்டன் டக் ஆனார். இதனால் ஆர்சிபி 7 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து தடுமாறியது,

40 பந்தில் 50

40 பந்தில் 50

இதன் பின்னர் களத்துக்கு வந்த மேக்ஸ்வெல் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 23 ரன்கள் விளாசி குர்னல் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் , மறு முனையில் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் டுபிளஸிஸ் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார்.

டுபிளஸில் 96

டுபிளஸில் 96

இந்த நிலையில், பிரபுதேசாய் 10 ரன்களிலும், சபாஷ் அகமது 22 பந்தில் 26 ரன்களும் ஆட்டமிழக்க, டுபிளஸிஸ் 40 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். அதன் பிறகு டுபிளஸில் ருத்ரதாண்டவம் ஆடினார். 11 பவுண்டரிகளையும், 2 சிக்சர்களையும் பறக்கவிட்ட அவர் 64 பந்துகளில் 96 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

182 ரன்கள் இலக்கு

182 ரன்கள் இலக்கு

இறுதியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 8 பந்தில் ஒரு சிக்சருடன் 13 ரன்களை குவித்தார். இதனால், ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி 160 ரன்கள் தான் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 ரன்களை கூடுதலாக அடித்துள்ளது. இந்த 20 கூடுதல் ரன்களை அடிக்க தான் சிஎஸ்கே தவறி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 19, 2022, 22:48 [IST]
Other articles published on Apr 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+