Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இருந்தாலும் ரொம்ப தைரியம் தான்.. டூப்ளசிஸ் எடுத்த ரிஸ்க்.. கேகேஆர் போட்டியில் ட்விஸ்ட்!!

மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளும் மோதும் இப்போட்டி மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதே மைதானத்தில் தான் பஞ்சாப் அணியுடனான முதல் போட்டியில் ஆர்சிபி 205 ரன்கள் அடித்தும் தோல்வியடைந்திருந்தது. இன்று இதே போட்டியில் கம்பேக் கொடுக்க காத்துள்ளது.

பழித்தீர்க்க திட்டம்

பழித்தீர்க்க திட்டம்

இதுமட்டுமல்லாமல் இன்றைய போட்டியில் ஆர்சிபிக்கு பழைய கணக்கு ஒன்று பாக்கியுள்ளது. அதாவது கடந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றின் போது ஆர்சிபி அணியை வெளியேற்றியது கொல்கத்தா அணி தான். அதற்கு பழித்தீர்க்கும் வகையில் பக்கா ப்ளேயிங் 11 உடன் களமிறங்கியுள்ளது.

டூப்ளசிஸின் துணிச்சல்

டூப்ளசிஸின் துணிச்சல்

ஆர்சிபி அணி கடந்த முறை தோல்வியடைந்த போதும், பவுலர்கள் சொதப்பிய போதும், அதே ப்ளேயிங் 11 உடன் களமிறங்கியுள்ளது. பவுலர் ஆகாஷ் தீப் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இவர் கடந்த போட்டியில் 3 ஓவர்களில் 38 ரன்களை வாரி வழங்கினார். எனவே இவருக்கு பதிலாக சித்தார்த் கவுல் களமிறங்குவார் என தகவல் வெளியானது. கடைசியில் அதே வீரர்களுடன் வென்று காட்டுவதாக டூப்ளசிஸ் கூறினார். ஒரே ஒரு மாற்றமாக ஆகாஷ் தீப்பை மாற்றவுள்ளனர்.

 ஆர்சிபி அணி

ஆர்சிபி அணி

டூப்ளசிஸ், அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ரூதர்ஃபோர்ட், சபாஷ் அகமது, வானிண்டு ஹசரங்கா, டேவிட் வில்லி, முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், ஆகாஷ் தீப்

கேகேஆர் தந்த ட்விஸ்ட்

கேகேஆர் தந்த ட்விஸ்ட்

கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. குறிப்பாக பவுலிங் படை சிறப்பாக செயல்பட்டதால் சிஎஸ்கே அணியை 131 ரன்களுக்கு சுருட்டியது. எனினும் இந்த முறை ஒரு பவுலரை நீக்கியுள்ளனர். இளம் வீரர் ஷிவம் மாவி தான் அது. கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் 35 ரன்களை விட்டுக்கொடுத்தார். அவருக்கு பதிலாக டிம் சவுத்தி களமிறங்குகிறார்.

கேகேஆர் ப்ளேயிங் 11

கேகேஆர் ப்ளேயிங் 11

அஜிங்கியா ரகானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரேன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி

Story first published: Wednesday, March 30, 2022, 20:38 [IST]
Other articles published on Mar 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+