
புதிய உச்சம்
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் அதிக கவனத்தையும், ரசிகர்களையும் ஈர்த்த விளையாட்டு அணிகளின் பட்டியல் வெளியிடப்படும். அந்தவகையில் 2021ம் ஆண்டிற்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. வழக்கமாக கால்பந்து அணிகள் மட்டுமே ஆக்கிரமித்திருக்கும் இந்த பட்டியலில் திடீரென இந்தியாவை சேர்ந்த சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடம்பிடித்துள்ளது.

எத்தனையாவது இடம்
விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி மொத்தமாக சுமார் 820 மில்லியன் ( 80 கோடி 20 லட்சம் புள்ளிகள் ) செயல்பாடுகளுடன் 8வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 752 மில்லியன் ( 75 கோடியே 2 லட்சம் புள்ளிகள்) செயல்பாடுகளுடன் 9வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

இரு அணிகளின் பெருமை
இப்பட்டியலில் உலகின் வேறு எந்த கிரிக்கெட் அணியின் பெயர்களும் இடம்பெறவில்லை என்பதே ஐபிஎல் அணிகளின் பெருமை. முதலிடத்தில் மேன்செஸ்டர் யுனைடெட் அணி 2.6 பில்லியன், எஃப்சி பார்சிலோனா அணி 2.3 பில்லியன், ரியல் மெட்ரிட் 1.3 பில்லியன் என அடுத்தடுத்த இடங்களில் கால்பந்து அணிகள் தான் ஆக்கிரமித்துள்ளன.

சிஎஸ்கேவின் மதிப்பு
கடந்தாண்டு சிஎஸ்கே அணி பொருளாதார ரீதியாக புதிய உச்சத்தை தொட்டிருந்தது. அதாவது, 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோற்றது வரை சிஎஸ்கே அணியின் மதிப்பு ரூ.611 கோடியாக இருந்தது. ஆனால் 2021ம் ஆண்டு கோப்பையை வென்றவுடன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.4,200 கோடியாக அதிகரித்து பிரமிக்க வைத்தது. இந்நிலையில் தான் தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கூடுதல் சிறப்புகள்
ஏற்கனவே ஐபிஎல் தொடர்தான் உலகில் அதிக பணம் புரளும் கிரிக்கெட் தொடராக வலம் வருகிறது. இந்தாண்டு 2 புதிய அணிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். எனவே வரும் காலங்களில் உலகின் முன்னணி கால்பந்து அணிகளுக்கே சவால் விடும் அளவிற்கு ஐபிஎல் அணிகள் வளர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications