Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபார்முக்கு வந்த விராட் கோலி.. விழிப்பிதுங்கி நின்ற ரோகித் சர்மா.. சிஎஸ்கேவுடன் இணைந்த மும்பை அணி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளும் மோதிய 18வது லீக் ஆட்டம் புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, மும்பை அணி பேட்டிங்கில் மோசமாக சொதப்பியது.

 மும்பை பேட்டிங்

மும்பை பேட்டிங்

தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் சிறப்பாக ஆடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் அதன் பின்னர் தான் பெரும் சரிவு காத்திருந்தது. அவர்கள் இருவருமே தலா 26 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் வந்த டேவாட் பிரேவிஸ் 8 ரன்களுக்கு வெளியேறினார்.

 மும்பையின் சோகம்

மும்பையின் சோகம்

நல்ல ஃபார்மில் இருந்த திலக் வர்மா, கெயீரன் பொல்லார்ட் ஆகியோரும் டக் அவுட்டாக, அறிமுக வீரர் ராம்தீப் சிங் 6 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் 50 - 1 என இருந்த மும்பை அணியின் ஸ்கோர் 79 - 6 என பரிதாபமான நிலைக்கு சென்றது. அப்போது ஸ்டரைக்கிற்கு வந்த சூர்யகுமார் யாதவ் மும்பை அணியை தனி ஒருவனாக தாங்கிப்பிடித்தார்.

 சூர்யகுமாரின் பொறுப்பு

சூர்யகுமாரின் பொறுப்பு

உனத்கட் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சூர்யகுமார் யாதவ் முழு ஸ்ட்ரைக்கையும் தன்பக்கமே இருக்கும்படி பார்த்துக்கொண்டார். 37 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என மொத்தமாக 68 ரன்களை விளாசித்தள்ளினார். இதனால் 79 - 6 என்ற நிலையில் இருந்து 151 - 6 என அபார ஸ்கோரை மும்பை அணி எட்டியது.

ஆர்சிபி பேட்டிங்

ஆர்சிபி பேட்டிங்

152 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க ஜோடி டூப்ளசிஸ் - அனுஜ்வாட் ஆகியோரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கேப்டன் டூப்ளசிஸ் 16 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அனுஜ்வாட் - விராட் கோலி ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர்.

 கோலியின் மறுமுகம்

கோலியின் மறுமுகம்

அனுஜ்வாட் 47 பந்துகளில் 66 ரன்களும், விராட் கோலி 36 பந்துகளில் 48 ரன்களையும் எடுத்து அவுட்டாகினர். கடைசில் தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் அதிரடி காட்ட ஆர்சிபி அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

Story first published: Saturday, April 9, 2022, 23:35 [IST]
Other articles published on Apr 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+