Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி கோல்டன் டக்.. அதே நாளில் ஆர்சிபி சந்தித்த சோகம்.. 68 ரன்களில் சுருண்ட ஆர்சிபி

மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 68 ரன்களுக்கு சுருண்டது.

Recommended Video

RCB vs SRH: SRH Race To Nine-Wicket Win After RCB Collapse To 68 All Out | Oneindia Tamil

மும்பை பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீசியது.

இந்த நாள் ஆர்சிபி அணிக்கு ஒரு மோசமான நாளாகும். ஏனெனில் இதே நாள் 2017ஆம் ஆண்டு ஆர்சிபி அணி 49 ரன்களுக்கு சுருண்டது.

பெங்களூரு திணறல்

பெங்களூரு திணறல்

இதனால் இன்றைய நாள் தொடக்கத்தில் இருந்தே பெங்களூரு அணியை ரசிகர்கள் கிண்டல் செய்தனர். தற்போது அதே மாதிரி ஒரு சோக சாதனையை பெங்களூரு படைத்தது. தொடக்கம் முதலேயே ஐதராபாத் அணியின் அதிரடி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பெங்களூரு வீரர்கள் திணறினர்.

கோலி கோல்டன் டக்

கோலி கோல்டன் டக்

யான்வீசிய ஓவரில் ஆர்சிபி கேப்டன் டுபிளஸிஸ்5 ரன்களில் ஆட்டமிழக்க, பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய விராட் கோலி முதல் பந்திலேயே தொடர்ந்து 2வது முறையாக கோல்டன் டக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் அனுஜ் ராவத் நடையை கட்ட, ஒரே ஓவரில் ஆர்சிபி 3 விக்கெட்டை இழந்தது.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

சரி, மேக்ஸ்வெல் அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த ஆர்சிபி ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் 12 ரன்களில் வெளியேறினார். இதனால் 20 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆர்சிபி 4 விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாய் பிரபுதேசாய் 15 ரன்கள் மட்டுமே எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

68 ஆல் அவுட்

68 ஆல் அவுட்

இந்த சீசனில் அதிரடியை காட்டிய தினேஷ் கார்த்திக்கும் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் 16.1வது ஓவரில் ஆர்சிபி அணி 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஐதராபாத் அணியில் யான்சென், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நடப்பு சீசனில் குறைந்தபட்ச ஸ்கோரை ஆர்சிபி பதிவு செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Story first published: Saturday, April 23, 2022, 21:37 [IST]
Other articles published on Apr 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+